Roundabout vs சமிஞ்சை சந்திப்பு
Roundabout
===நன்மை===
-
ஒரு குறிப்பிட்ட நேரம் என்று வாகன போக்குவரத்து நிறுத்தி வைக்கப்படாமை. வாகன போக்குவரத்து தடைபடாமல் தொடர்ச்சியாக நடந்துகொண்டே இருக்கும்.
-
தேவையற்ற காத்திருப்பு இருக்காது.
-
சமிஞ்சை சந்திப்பில் போல் அதிகமாக வாகனம் இல்லாத நேரங்களிலும் கூட குறித்த சமிஞ்சை மாறும்மட்டும் காத்திருக்க வேண்டிய நிலையில்லாமை.
-
சமிஞ்சை சந்திப்பில் நடக்கும் விபத்தால் ஏற்படும் தடங்கல் அளவே இங்கும் ஏற்படும்.
===தீமை===
-
சமிஞ்சை சந்திபை கட்ட தேவையான இட வசதியை விட இதைக் கட்டுவதற்கு சற்று கூடிய இடவசதி வேண்டும்.
-
Roundabout இற்குள் நுழைய எத்தணிக்கும் வாகனங்களை விட உள்ளே இருக்கும் வாகங்களுக்கு முதலுரிமை கொடுக்கப்படுகிறது. இதனால், ஒரு திசை நோக்கி அதிக வாகனங்கள் வருமானால் மற்றய வாகனங்கள் உள் நுழைய தங்களின் சந்தர்ப்பம் வரும் என்று காத்துக்கொண்டிருப்பது முடிவற்றதாகிவிடக்கூடிய அபாயம் உள்ளது. இந்த சந்தர்ப்பத்தை ஆங்கிலத்தில் “starvation” என்று சொல்வார்கள். தங்களது சந்தர்ப்பம் வரும் என்று காத்திருப்பதே முடிவாகிவிடும்.
சமிஞ்சை சந்திப்பு
===நன்மை===
-
சமிஞ்சைகள் இருப்பதால் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட வாகன போக்குவரத்தை உருவாக்கலாம். அதாவது, வெகு தொலைவில் வாகன நெரிசல் ஏற்படுகிறது என்றால், இங்கே அந்த திசைக்கு போகத் தேவையான சமிஞ்சையை நேரம் கூட்டி வாகனங்களைத் தாமதப்படுத்தலாம்.
-
நான்கு (4) வீதிகள் சந்திக்கும், சமிஞ்சை சந்திப்பில் எல்லோரும் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட உபயோகம் பெறுவார்கள். அதாவது, ஒருவருக்கும் சந்தியைக் கடக்க முடியாமல் போகும் சந்தர்ப்பம் நிகழாது.
===தீமை===
-
தேவையற்ற வாகன நெரிசல் ஏற்படலாம்.
-
ஒரு திசையில் அதிக வாகனங்கள் வந்துகொண்டிருக்குமானால், அந்த திசையில் தேவையான சமிஞ்சை மாறுவதற்கு காத்துக்கொண்டிருப்பதால் வகன நெரிசல் ஏற்படலாம். மற்றய திசையில் வாகனங்கள் இல்லாதிருப்பினும் சமிஞ்சை அந்தத் திசைக்கும் வீணே உபயோகப்படுத்தப்படும்.
-
சமிஞ்சை சந்திப்பில் சமிஞ்சைகளில் கோளாறு ஏற்பட்டாலோ (அ) மின்சாரம் தடைப்பட்டாலோ அந்த சமிஞ்சை சந்திப்பை வழிநடத்துவதற்கு ஒரு காவல்துறை அதிகாரி பிரசன்னமாக வேண்டியிருக்கும் (அ) வாகன போக்குவரத்து மிகவும் மந்தமான நிலையில் நடைபெறும்.
-
சமிஞ்சை சந்திப்பில் கோளாறு ஏற்பட்டால் அதை சரி பார்க்க ஒரு வல்லுனரின் உதவி தேவைப்படும். இதனால் வல்லுனருக்கு அவசர வேண்டுகோள் விடுக்கப்பட்டு அவர் அதை திருத்தும் வரைக்கும் வாகன போக்குவரத்து மந்தமாக காணப்படும். இதனால் பராமரிப்புச் செலவுகளும் அதிகமாகும்.
_____
CAPital
One Comment
demigod
Good one. நல்லா இருந்தது.