Terrorism

தீவிரவாதி

இந்தியாவில் அப்பப்ப குண்டு வெடித்துக்கொண்டு தான் இருக்கிறது. சிலர் வைத்தார்கள் அவர்களுக்கு தண்டனை வழங்கினோம் என்றில்லாமல், ஒரு திட்டமிட்ட செயலாகத் தான் இருக்கிறது.

என்னைப் பொறுத்த வரையில், ஏன் இப்படி குண்டு வைக்கிறார்கள். அவர்களுக்கு என்ன வேணும் என்று காரணத்தைக் கண்டு பிடித்து அதை நிவர்த்தி செய்ய வேண்டும். தீவிரவாதி தீவிரவாதி என்று சொல்லிக்கொண்டிருந்தால் அவர்களுக்கு இன்னும் கோபம் அதிகமாகும், கோரிக்கை நிவர்த்தி செய்யப்படவில்லை என்று விரக்தியாகும், இதனால் மேலும் திட்டங்கள் தீட்டுவார்கள்.

எங்கள் சமூகத்தில் இருக்கும் மற்றவர்களை இறுக்கிப் பிடிக்கும் பழக்கம் தான் அரசாங்கங்களும் மற்றவர்களுக்கு அதிகாரம் கொடுக்க மறுக்கிறது. “தோழுக்கு மேல் தோழன்” என்று வாய்வார்த்தையில் சொல்கிறோமே தவிர உண்மையிலேயே சுயமாக முடிவெடுக்கும் அதிகாரத்தை நாம் வழங்குவதில்லை.

ஒரு குடும்பத்திலேயே தோழுக்கு மேல் வழர்ந்த பையனை தட்டி வளர்க்க எண்ணினால், ஒண்டில் அவன் அவர்கள் சொன்னபடி கேட்பான், இல்லையேல் வீட்டை விட்டி வெளியேறி உதவாக்கரையாக (அ) உருப்படியாக வாழ்வான். அவனுக்கும் சில அதிகாரங்களை விட்டுக் கொடுத்தால் எல்லோரும் நலமாக வாழலாம் என்பது புரிவதில்லை. எப்போது அதிகாரம் தருவது தான் தீர்வு என்று கோரப்படுதோ அப்போதே அதிகாரத்தை மேலிடம் கொடுத்தால் தான் வருங்காலம் நிலையாக இருக்கும். தர மாட்டேன்; நான் சொன்னது தான் சட்டம் என்றால், ஒடுக்கப்படுபவன் பொங்கி எழுவான்; அகிம்சாவாதியாக; தீவிரவாதியாக.

போராட்ட வழிகள் வேறாக இருக்கலாம்; ஆனால், குறிக்கோள் ஒன்று தான்.

தப்பை ஞாயப்படுத்த எத்தனிக்கவில்லை.

தப்பு செய்துவிட்டான் என்று தண்டனை வழங்கினால், பிரச்சனை ஒழியாது. தப்பு ஏன் செய்தான் என்று காரணம் கண்டறிந்து அதைத் தீர்க்க வேண்டும். அப்போது தான் எல்லா தீவிரவாதிகளும் சிறைப்பட்டாலும் புதிதாக ஒரு தீவிரவாதி உருவாகாமல் இருப்பான்.

என் தந்தையை சிறைப்பிடித்தார்கள். ஏன்? குண்டுவைத்ததால். குண்டு வைத்தல் குற்றம். அப்படியாயின் ஏன் என் தந்தை குண்டை வைத்தார்? இந்தக் கேள்வியின் விடைதான் இன்னுமோர் தீவிரவாதி!

 

The following post also has the thinking in the line of mine.
Target the Real Terrorists

______
CAPital

 

சேர்க்கப்பட்டது I [GMT 2006/07/13 @ 20:02]

முன்பெல்லாம், அயல் நாடுகளில் தீவிரவாதிகள் உருவாக காரணமாக இருந்தது இந்தியா. இப்போது இந்தியாவிற்குள்ளேயே தீவிரவாதிகளை உருவாக்குகிறார்கள் மற்றய தீவிரவாதிகள்.

தீவிரவாதிகள் புத்திசாலி ஆகிவிட்டார்களா
அல்லது
புத்திசாலிகள் தீவிரவாதி ஆகிவிட்டார்களா?

இதைத் தான் “தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்” என்பதோ?

4 Comments

  • senthilraj

    I strongly object your last statements. There are only two instances where india has interefered in foreign affairs, that too for legitimate reasons.
    1. In srilanka, for protecting srilankan tamils
    2. In Bangladesh, on request of rehman.

    Your statement means that the present terrorist attacks are result of india’s past actions. That means, india has been involving in promoting terrorism across many countries, and now victim of its own action.

    No true indian, can say like that. And I dont know how you came to this conclusion.

    Are these terrorist attacks not a handiwork of pakistan? Is not india a victim of the pakistan sponsored terrorism.

    No where you have mentioned Pakistan in your article.

    Your articles some what appears to be supportive of those terrorists.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image

© 2024 - All Right Reserved. | Adadaa logo