தமிழ்
தமிழுக்கு என்றொரு சிறப்பம்சம் இருக்கிறது. ஒரு சொல்லிலிருந்து அதன் செயற்பாட்டை கண்டறியலாம். உண் திருபடைந்து உணவு ஆக மாறினாலும், இப்பொதும் எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய திருக்குறளையும் ஒரு சில விளக்கங்களோடு இன்றய மனிதனால் புரிந்து கொள்ளலாம். இச் சிறப்பம்சம் தமிழுக்கு மட்டுமே உள்ளது. இதே போல் ஆங்கிலத்தின் மூத்த நூல்களை இக்காலத்தில் வாசித்து புரிந்து கொள்ள முடியாது. அதற்கென மேலும் படித்தே உங்களால் புரிந்துகொள்ள முடியும்.
முக்கியமான விடையம் என்னவென்றால், ஆங்கிலம் என்று சொல்கிறோமே தவிர, அவை ஆங்கில எழுத்துக்களே அல்ல. அவை லத்தீன் எழுத்துக்கள். இவ்வாறே, பல ஐரோப்பிய மொழிகளும் தங்கள் எழுத்துக்களை விட்டு லத்தீன் எழுத்துக்கு தாவி பல காலம். அதனாலேயே செம்மொழி என்று வேறு பல மொழிகள் அறிவிக்கப்பட்டாலும் கூட அந்த மொழிகள் இப்போதைக்கு பாவனையில் இல்லை. அவைகள் முற்றுமுழுதாகவோ அல்லது கூடுதலானதாகவோ கைவிடப்பட்டு புதிய முறையில் இருக்கின்றன.
இவ்வளவு சிறப்பம்சம் கொண்ட தமிழை எம் சந்ததி தான் குலைத்துவிட்டது என்ற அவச்சொல் எதிர்காலத்தில் வர விடலாமா?
______
CAPital
One Comment
Blogs, news and more!
very nice blog!mary