Tamil Unicode

தமிழ் ஒருங்குறி ?! -4

சிறிது காலத்திற்கு முன் நான் முழுத் தமிழில் ஒரு web application, அதாவது ஒரு பரம்பரை ஏடு [family tree] ஒன்றை Database இல் செய்ய எத்தணித்தேன். Database table name, field name, description, SQL query என்று சகலதிலையும் தமிழிலேயே செய்ய எத்தணித்தேன் இந்த ஒருங்குறி மூலம். எனது இந்த மென்பொருளை வேறொறுவர் மாற்றியமைப்பதாக இருந்தால், அவர் கட்டாயமாக தமிழ் எழுதப் படிக்க தெரிந்தவராக இருத்தல் வேண்டும் என்று ஒரு சின்ன முயற்சி. அப்போது தான் கவனித்தேன், சில இடங்களில் [interface] தமிழ் சரியாகத் தெரியும், மற்றய இடங்களில் வெறும் பெட்டிகள் தான் தெரியும். இது என்ன Microsoft ஒருங்குறியை பிழையாக ஏற்றிவிட்டதா என்று ஒரு முட்டாள்தனமான எண்ணம்.

அன்று தொடங்கியது எனது ஒருங்குறியின் பாவனைத் தேடல்.

சகல interface களிலும் மென் பொருளின் விசேட உதவி தேவை, எமது தமிழை சரியாக அது பாவிப்பதற்கு. Microsft எல்லா இடங்களிலும் இவ் விசேட உதவி வழங்கவில்லை. மேலும் தெரிந்து கொண்டது தான்; இந்தியா ஃகிந்திக்கு ஏற்பவாறே, மற்றய மொழிகளை மாற்றி ஒருங்குறியில் ஏற்றியிருக்கிறது அனேகமான மென்பொருள் தயாரிப்பாளர்கள் தங்களது நேரத்தையும் பணத்தையும் செலவு செய்து தங்களது எல்லா interface களிலும் இதை செய்து வெளியிட இன்னும் காலம் எடுக்கும். இற்றைக்கே பல தமிழர்கள் கணினியி8ல் தமிழில் எழுதுவதை விட ஆங்கிலத்தில் எழுதுவதை விரும்புகிறார்கள். இதற்கு ஒரேயொரு காரணம்: தமிழை கணினியில் எழுதுவதென்பது அவ்வளவு சுலபமல்ல. எதிர்கால ஒருங்குறி உலகத்திலுள்ள அனைத்து மொழிகளுக்கும் மேலும் efficiency ஐ கொடுக்கும்போது, இந்தியா மட்டும் தன் நாட்டிலுள்ள ஃகிந்தி தவிர வேறு எந்த மொழிக்கும் அச் சந்தர்ப்பதைக் கொடுக்கவில்லை என்று எண்ணும்போது ஆத்திரம் பொங்குதய்யா.

உலகத்திலுள்ள இப்போது பயன்படுத்தா சில மொழிகளுக்குக் கூட ஒருங்குறியில் ஏற்றியிருக்கிறார்கள்.

ஒருங்குறி தான் எதிர்கால கணினியின் செயல்திறன். இதை நன்கு அறிந்தவர்கள் தமிழ்க்கு இழைக்கப்பட்டது மாபெரும் துரோகம் என்பதையும் அறிவார்கள்.

 

பாகம் – 05 >>

<< பாகம் – 03

______
CAPital

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image

© 2024 - All Right Reserved. | Adadaa logo