தமிழ் ஒருங்குறி ?! -3
உலக மென்பொருளாளர்கள் ஒருங்குறிக்கு மாறிவிட்ட நேரத்தில், நீங்கள் போய் தமிழ் முழுக்கப் பிழை; முழுக்க மாற்று என்று சொன்னால் அவர்கள் செருப்பால்தான் அடிப்பார்கள்.
இந்தியா தன் மொழிகளுக்கு செய்த துரோகத்தால், நாம் அவதிப்பட்டே ஆக வேண்டியது நியதி.
பலர் இதற்கு சொல்லலாம் இல்லை தமிழும் நன்றாக தெரிய வைக்கலாம் என்று. ஆமாம் நன்றாக தெரியும்; ஆனால் தமிழை கணினியில், தெரிய வைக்க, சேமிக்க, வரிசைப்படுத்த
[sorting], சுருக்க [zip] என்று சகல வழிகளிலும் ஒரு மேலதிக செயற்பாடு தேவை. இதே ஃகிந்திக்கு இவை தேவை இல்லை (அ) குறவு.
3 எழுத்துக்களே ஆன “அம்மா” என்ற சொல்லில் 5 ஒருங்குறிகள் உள்ளன. இப்படிப் பார்த்தால் தமிழை சேமிக்க உங்களுக்கு மேலும் அதிக இடம் தேவை.
“க்” = என்பது 2 ஒருங்குறி [ க என்பது ஒன்று, புள்ளி ஒன்று]; ஐயா தமிழில் “க” என்பது மெய்யல்ல. “க்” என்பது தான் மெய். ஒருங்குறியின் கோட்பாடுகளில் கூறப்பட்டுள்ளது அடிப்படை எழுத்துக்களே சேர்க்கவேண்டும் என்று. ஃகிந்திக்கு ஏற்றவாறு “க்” பிரிக்கப்பட்டு, “க” என்றும் புள்ளி என்றும் தனித்தனியாக ஏற்றப்பட்டுள்ளது. ஃகிந்திக்கு ஏற்றவாறு தமிழ் எழுத்துக்கள் ஒழுங்கு மாறி வைக்கப்பட்டுள்ளது. இதனாலேயே, தமிழை வரிசைப்படுத்த இலகுவான வழி இல்லை.
“புள்ளி” யின் பெயர் “அனுஸ்வரா” என்றும், இன்னுமொருமுறை “விரமா” என்றும் “ஃ” விசர்கா என்றும் தான் இருக்கிறது. ஒருங்குறி அமைப்பு எதையும் இனி மாற்ற இயலாதென்றே சொல்லிவிட்டது.
[source: http://www.unicode.org/charts/PDF/U0B80.pdf ]
“கோ” = என்பது 2 (அ) 3 ஒருங்குறி [ க என்பது ஒன்று, இரட்டைக் கொம்பு + அரவு ஒன்று (அ) க என்பது ஒன்று, இரட்டைக் கொம்பு ஒன்று, அரவு ஒன்று] – இது தான் ஒருங்குறியில் ஒரு தமிழ் எழுத்தை 2 விதமாக ஏற்றலாம். இது ஏதோ நன்மை போல் தெரிகிறது. உண்மை என்னவென்றால் நீங்கள் தமிழை வரிசைப்படுத்தும்போது, எதை என்று எடுப்பது? இதற்கெல்லம் மென்பொருள் விடைகாண வேண்டும்.
புதிய முயற்சியாக “க்” ஒருங்குறியில் ஏற்றுகிறார்கள். இதற்கும் “கோ” விற்கு உள்ள ஒரு எழுத்து இரண்டு விதமாக எழுதலாம் என்னும் பிரச்சனை வரும்.
நீங்கள் சொல்லலாம் எப்படியும் நம்மவர்கள் சரிசெய்து விடுவார்கள் என்றும். இவ்வளவு திருத்தங்கள், இவ்வளவு மேலதிக மென்பொருள் செயல்திறன் தேவை எல்லாம் வந்திருக்காதேயா நீங்கள் முதலிலேயே, தமிழ் அறிஞர் ஒருவரை கலந்தாலோசித்திருந்தால். இப்பொழுதும் கூட, செய்யப்பட்ட பிழைகள் திருத்தப்படமாட்டாது. மேலதிகமக சேர்க்கப்பட்டுள்ளதே ஒளிய வேறொன்றுமில்லை.
இவை எல்லாம் ஏன் ஏற்பட்டது? இந்தியா தமிழை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை.
அன்று மாண்புமிகு மு. கருணாநிதி அவர்கள் சொன்னது போல் [சரியென்று நினைக்கிறேன்] “தமிழனில்லாத நாடில்லை; ஆனால் தமிழனுக்கென்றொரு நாடில்லை”
மேலும் பல பிரச்சனைகள்:
http://www.angelfire.com/empire/thamizh/2/aanGilam/index.html
_____
CAPital
One Comment
Blogs, news and more!
very nice blog!mary