[UNICODE Tamil]
Dated: 2006/10/04 03:49 PM (GMT -5)
Re: தமிழ் – சிங்கள பேரினவாதம்.
ஐயா நாங்கள் என்ன ஐயா பாவம் செய்தோம். ஏன் இப்படி இல்லாததும் பொல்லாததும் சொல்லி கெடுக்கவென்றே நிற்கிறியள்?
///விடுதலைப் புலிகளின் இடைக் கால தன்னாட்சி அதிகாரசபை (ISGA)
இதில் 100 சதவீதம் விடுதலைப் புலிகளின் பிரதிநிதித்துவம் காணப்படுகின்றது.///
==========
தமிழீழ விடுதலைப் புலிகளினால் கோரப்பட்ட இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை வரைபு
———-
2. ISGA இன் அங்கத்துவ அமைப்பு
…
2.2 ISGA இன் அங்கத்துவ அமைப்பு கீழ்வருமாறு அமையும்.
2.2.a தமிழீழ விடுதலைப் புலிகளால் நியமிக்கப்படுகின்ற உறுப்பினர்கள்.
2.2.b இலங்கை அரசால் நியமிக்கப்படுகின்ற உறுப்பினர்கள், மற்றும்
2.2.c வடக்குக் கிழக்கிலுள்ள முஸ்லிம் சமூகத்தால் நியமிக்கப்படுகின்ற உறுப்பினர்கள்.
/// இந்த ISGA
வடக்கும், கிழக்கும் ஒன்றிணைக்கப்பட்ட ஆட்சிப் பிரதேசத்தை நிர்வகிக்கச் செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் ஆலோசனையாகும். இந்த இணைப்பு ஏற்பட்டால் இலங்கை சோனகரின் சனத்தொகைப் பரம்பல் விகிதாசாரம் இப்போது உள்ளதை விட அரைப் பங்காகக் குறைவதோடு,///
இலங்கை அரசியலமைப்பைத் தெரிந்து விட்டு கதைக்க வேண்டும். ஐயா ஏற்கனவே வடக்கும் கிழக்கும் ஒருங்கிணைக்கப்பட்ட நிர்வாகத்தின் கீழ் தான் இருக்கிறது. இது தான் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் உருப்படியான விடயம்.
///இந்த [சுனாமி] மீள் கட்டுமானக் கட்டமைப்பில் இலங்கைச் சோனகர் சேர்க்கப்படவில்லை. ///
========
சுனாமிக்கு பின்னரான தொழிற்பாட்டு முகாமைத்துவக் கட்டமைப்பொன்றை (P.Toms) தாபிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். (MOU)
———-
இ. அமைப்பு
உயர் மட்டக்குழு பின்வரும் உறுப்பினர்களைக் கொண்டிருத்தல் வேண்டும்.
1. 1 இலங்கை அரசின் நியமத்தர்;.
2. 1 தமிழீழ விடுதலைப் புலிகளின் நியமத்தர்;.
3. 1 முஸ்லிம் கட்சிகளின் நியமத்தர்;.
…
இ. அமைப்பு
பிராந்தியக்குழு பின்வரும் உறுப்பினர்களை கொண்டிக்கவேண்டும்.
1. இலங்கை அரசாங்கத்தினால் பெயர் குறித்து நியமிக்கப்படும் 2 உறுப்பினர்களில் ஒருவர் பிரதித்தவிசாளராக செயலாற்றுவார்.
2. தமிழீழ விடுதலைப் புலிகளினால் பெயர் குறித்து நியமிக்கப்படும் 5 உறுப்பினர்களில் ஒலுவர் தவிசாளராக செயலாற்றுவார்.
3. முஸ்லிம் கட்சிகளால் பெயர் குறித்து நியமிக்கப்பட்ட 3 உறுப்பினர்களில் ஒருவர் பிரதித்தவிசாளராக சேவையாற்றுவார்.
=======
///பல்லின மக்கள் கொண்ட நாட்டை இருவின நாடாகப் பார்ப்பதை விடுதலைப் புலிகள் முதலில் நிறுத்தி, சண்டை நிறுத்த, சமாதான, இறுதித் தீர்வு பேச்சுவார்த்தைகளில் இலங்கை சோனகரை புறந்தள்ளாது பல்லின அடிப்படையில் தீர்வொன்றை ஆராய்ந்தால், சர்வதேச சமூகம் தனது நேசக்கரத்தை நீட்டும்.///
ஆமாம், இலங்கையில் பல்லின மக்கள் இருக்கிறார்கள். ஆனால், இரு மொழி பேசும் மக்கள் தான் இருக்கிறார்கள் [ஆங்கிலம் வர்த்தக மொழி]. புலிகள் தமிழர்களுக்காக போராடுகிறார்கள். தமிழ் பேசும் சோனகர்கள் தமிழர்கள் தானே? இல்லாவிடில் சேனகர்கள் அரபு மொழியா பேசிக்கொண்டிருக்கிறார்கள் தமிழீழத்தில். ஆகவே உங்கள் கூற்று பல்லின மக்கள் என்பது சரி. ஆனால், புலிகள் இரு இன அடிப்படையில் போராடவில்லை. அவர்கள் மொழி அடிப்படையில் தான் போராடுகிறார்கள்.
—
______
CAPital