Adadaa.net பொங்கல் வாழ்த்து!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களுக்கு Adadaa.net இன் பொங்கல் வாழ்த்துக்கள்.

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

ஏற்கனவே அறிவித்திருந்தது போல், Adadaa.net ஐத் தமிழ்ப்படுத்த முயற்சித்திருக்கிறேன்.

தமிழர்கள் உலகெங்கும் இருப்பதால், வேற்று மொழிகளையும் தெரிவு செய்யக்கூடிஅதாக இருக்க முடிவுசெய்திருக்கிறேன். அதற்காக என்னால் எல்லா மொழிகளிலும் மொழிபெயர்க்க முடியாது. ஆகவே, ஏற்கனவே இலவசமாக மொழிபெயர்து இருப்பவற்றை இங்கு கொடுத்திருக்கிறேன். இப்போதைக்கு சுவீடிஷ், ரஷ்யம், தமிழ், Traditional சீனம் மொழிகளை ஏற்றியிருக்கிறேன்.

உங்கள் விருப்ப மொழிக்கேற்ப Options ==> General ==> Language இல் தெரிவுசெய்யுங்கள்:
சுவீடிஷ் = WPMUsv_SE
ரஷ்யம் = ru_RU
தமிழ் = ta_TE
Traditional சீனம் = zh_TW

முற்றுமுளுதாக Adadaa.net இன்றைக்கு தமிழில் இல்லை. அதிகப்படியான சொற்கள் இருப்பதால், முழு மொழிமாற்றத்திற்கு நேரம் எடுக்கும். ஏலக்கூடிய வரை மரியாதையான சொற்களை சகல இடங்களிலும் உபயோகித்திருக்கிறேன். அதாவது, “நில்” என்றில்லாமல் “நிற்க”. கிரந்த எழுத்துக்களைத் [ஹ், ஷ், ஜ், ஸ்] தவிர்க்க முயற்சிசெய்திருக்கிறேன்.

ஆங்கில சொற்களுக்கு பதிலாக தமிழ்ச் சொற்களைப் பிரயோகிக்க, பெரிய சொற்களாக வருவதால் இடம் பற்றாமல் Adadaa.net இன் அழகு குழம்புகிறது. இதன் காரணமாக ஆகக்குறுகிய சொல்லைப் பயன்படுத்த முயற்சிசெய்திருக்கிறேன்.Adadaa.net இல் பல மாற்றங்கள் செய்திருப்பதால், சில இடங்களில் சில பிரச்சினைகளைக் கொடுக்கிறது. அதை எல்லாம் சரி செய்ய வேண்டும்.

எதிர்காலத்தை நோக்கி:
Adadaa.net வெறும் உங்கள் எண்ணங்களை பிரசுரிக்க என்று மட்டும் நின்றுவிடாது, மேலும் பல வழிகளில் உதவ வைப்பதே உத்தேசம்.

நீங்கள் இடும் இடுகைகளை பயனர்கள் புள்ளி இட வைக்கலாம்.
நீங்கள் Adadaa.net இல் தமிழில் தட்டச்சிய பின் அதற்கான விளக்கத்தை ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் பெற வசதி செய்யலாம். இதற்காக நாங்கள் அகராதி உருவாக்கத் தேவையில்லை. ஏற்கனவே இணையத்தில் இருக்கும் அகராதிகளில் சிறந்த ஒன்றைத் தெரிவு செய்து தொடுப்புக் கொடுத்தாலே போதுமானது.
அதே போல் ஆங்கில சொற்களுக்கு ஏற்ப தமிழ் சொற்களைக் கண்டுபிடிக்கவும் வைக்கலாம்.
ஏன் எதிர்காலத்தில், தமிழ் இலக்கணப் பிழைகளைக் கூட சரி பார்க்க வைக்க இயலும் [அப்படி ஒரு சேவை வந்த பின்].
பிளாக்கரில் இருப்பது போல் மின்னஞ்சல் ஊடக இடுகைகளை உங்கள் பதிவில் பிரசுரிக்க இயலும்.
Adadaa.net இன் இன்னுமொரு தளமாக ஒரு கருத்துக்களம் [forum] நிறுவலாம்.

அதே நேரத்தில், ஒருங்குறியில் [unicode] தமிழுக்கு ஒரு பிரச்சினையும் இருக்கிறது. நீங்கள் பார்க்கும் எழுத்துகள் அளவு இல்லை உண்மையில் கணினி பார்ப்பது. இதனால், சில சந்தர்ப்பங்களில் நீங்கள் இடும் இடுகைகள் தொலைந்து/ இணைப்புக் கொடுக்க முடியாமல் போகக்கூடிய சந்தர்ப்பம் இருக்கிறது. மேலும் அறிய இடுகைகளில் தமிழில் தலைப்பு வைக்கும்போது கவனிக்கப்பட வேண்டியவை பார்வையிடவும்.

இது மட்டுமின்றி, தமிழில் Theme கள் அமைக்க வேண்டும்.
முழு மொழிபெயர்ப்பும் செய்ய வேண்டும்.
சோதனை செய்து பார்த்து கருத்துச் சொல்வதற்கு என்று வேறு பல உதவிகள் தேவைப்படுகிறது.

உங்கள் உதவியை வேண்டுகிறேன். உங்களுக்கு விருப்பம் இருப்பின் இந்த இடுகைக்கு கருத்தோ (அ) எனது மின்னஞ்சல் [email protected] இற்கு ஒரு மடலோ அனுப்பி வைக்கவும்.

மீண்டும் தமிழ் நெஞ்சங்களுக்கு பொங்கல் வாழ்த்துகள்.


அன்புடன்,
Adadaa.net
http://adadaa.net/
தமிழ் வலைப் பதிவு சேவை

2 thoughts on “Adadaa.net பொங்கல் வாழ்த்து!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image

Related Posts

Begin typing your search term above and press enter to search. Press ESC to cancel.

Back To Top
© 2023 - All Right Reserved. | Adadaa logo