ஒலி, காணொளி க‌ருத்துக்க‌ள்

அட‌டா இல் உள்ள‌ உங்க‌ள் ப‌திவில் இனிமேல் ஒலி, காணொளி க‌ருத்துக்க‌ளை உங்க‌ள் வாச‌க‌ர்க‌ள் விட‌லாம்; த‌ட்ட‌ச்ச‌ வேண்டுமே என்று சின‌ந்து கொள்ள‌மாட்டார்க‌ள்.
Visitors to your blog at Adadaa can now leave voice and video comments. They will not be annoyed of thinking about typing the comments.

உத‌வி

Adadaa.net தமிழ் வலைப்பதிவு சேவை – தளத்திற்கான உதவிகள் பெறும்/ கொடுக்கும் த‌ள‌மாக‌ அட‌டா உத‌வி த‌ள‌ம் உருவாக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. http://adadaa.net/support/ உங்க‌ள் வ‌லைப்ப‌திவிற்கு தேவையான‌ அடைப்ப‌ல‌கைக‌ள் [Themes], Plugins என்று அனைத்து உத‌விக‌ளையும் இங்கே கோர‌லாம். உங்க‌ளுக்கு விருப்ப‌மான‌ ஒரு அடைப்ப‌லகை/ Plugins அட‌டா இல் இல்லை, ஆனால் இணைய‌த்தில் வேறு இட‌த்தில் இருக்கிற‌து என்று தெரிய‌ப்ப‌டுத்தினால், அதை உங்க‌ளுக்காக‌ பெற்றுத்த‌ர‌ முய‌ற்சிசெய்வோம்.

த‌னித் த‌மிழ் ஓடைக‌ள்

அட‌டா இல் உள்ள‌ அத்த‌னை வ‌லைப்ப‌திவுக‌ளிலிருந்தும் பிர‌சுரிக்க‌ப்ப‌டும் இடுகைக‌ள் ப‌க்க‌ங்க‌ள், ம‌ற்றும் க‌ருத்துக்க‌ள் யாவும் ஒரு RSS ஓடையின் கீழ் பெற‌லாம். நீங்க‌ள் ஒரு த‌மிழ் வ‌லைப்ப‌திவுக‌ள் திர‌ட்டி த‌ள‌ம் வைத்திருக்கும் ஒருவ‌ராக‌ இருந்தால், அட‌டா உங்க‌ளுக்காக‌வே த‌னித் த‌மிழ் ஓடைக‌ளை வ‌ழ‌ங்குகிற‌து. உங்க‌ள் த‌ள‌ங்க‌ளில் த‌மிழ் ஆக்க‌ங்க‌ள் ம‌ட்டுமே தோன்ற‌வேண்டும் என்ற‌ உங்க‌ள் க‌ட்டுப்பாட்டை இந்த‌ ஓடைக‌ள் இல‌குவாகுகின்ற‌ன‌. த‌மிழ் வ‌லைப்ப‌திவு திர‌ட்டிக‌ள் வைத்திருக்கும் ந‌ட‌த்துன‌ர்க‌ள் ம‌ட்டுமின்றி, வேறு இட‌ங்க‌ளில் வ‌லைப்ப‌திவு வைத்திருக்கும் ந‌ண்ப‌ர்க‌ளும், அட‌டா […]

நேர‌டியாக‌ த‌மிழில் த‌ட்ட‌ச்சு

Adadaa.net இன் தனிச் சிறப்பம்சமாக நேரடியாக உங்கள் பதிவில் தமிழிலேயே தட்டச்சலாம் என்னும் வசதி. நீங்கள் இடுகைகள், பக்கங்கள் எழுதும்போது தமிழில் தட்டச்ச வேறெந்த மென்பொருளோ, இணையத்தளத்திற்கோ செல்லவேண்டிய அவசியமில்லை. நேரடியாக புது இடுகை, பக்கத்தில் உங்கள் அபிமான தமிழ் தட்டச்சை உபயோகித்து ஆக்கத்தை உருவாக்கலாம். உங்கள் அபிமான தட்டச்சை ஒரு கிளிக் செய்து தொடங்கலாம் தமிழை. உங்கள் Adadaa.net வ‌லைப்ப‌திவின் ஆளுந‌ர் ப‌குதிக்குச் சென்று எந்த‌ த‌மிழ் த‌ட்ட‌ச்சு இய‌ல்நிலைத் த‌ட்ட‌ச்சாக‌ உங்க‌ள் வ‌லைப்ப‌திவில் இருக்க‌வேண்டும் […]

கருத்துக்களை நேரடியாக தமிழிலேயே தட்டச்சலாம்

உங்க‌ள் த‌மிழ்ப்ப‌திவிற்கு வ‌ரும் விருந்தின‌ர்க‌ள் நேர‌டியாக‌ த‌மிழை த‌ட்ட‌ச்ச‌லாம். இத‌ற்காக‌ எந்த‌ ஒரு மென்பொருளையும் அவ‌ர்க‌ள் நிறுவ‌த் தேவையில்லை. இத‌ன் உண்மையான‌ ப‌ய‌ன் என்ன‌வென்றால், உல‌கில் எந்த‌ மூலையில் இருந்தாலும் உங்க‌ள் த‌மிழ்ப்ப‌திவிற்கு வ‌ருப‌வ‌ர்க‌ள், இல‌குவாக நேர‌டியாக‌வே த‌மிழில் க‌ருத்துத் தெரிவிக்க‌லாம். த‌ங்க‌ள் க‌ணினியில் த‌மிழ் மென்பொருள் நிறுவ‌வேண்டும் என்ற‌ க‌வ‌லையே இல்லை. ப‌ய‌ன‌ர்க‌ள், அவ‌ர்க‌ளுக்கு ப‌ழ‌க்க‌மான‌ த‌மிழ்ங்கில‌ம், த‌மிழ் 99, அல்ல‌து பாமினி த‌ட்ட‌ச்சு முறைக‌ளைப் ப‌ய‌ன்ப‌டுத்தி த‌ட்ட‌ச்ச‌லாம். ஒரு முறையான‌ த‌மிழ் த‌ட்ட‌ச்சுத் தெரிந்த‌வ‌ர்க‌ள் […]

இடுகைப் ப‌ர‌வ‌லாக்கம்

உங்க‌ள் தமிழ் ஆக்கங்கள், இணைய‌த்தில் உள்ள‌ த‌மிழ் வ‌லைப்ப‌திவு திர‌ட்டிக‌ளில் நீங்க‌ள் சேர்க்காம‌லே தோன்றும் வ‌ச‌தி. உங்க‌ள் ஆக்க‌ங்க‌ளுக்கு ஒரு ப‌ர‌வ‌லாக்க‌ம் தானாக‌வே ந‌டைபெறும். மேலே ப‌ட‌த்தில் தெரியும் த‌மிழ் வ‌லைப்ப‌திவு திர‌ட்டிக‌ள் ம‌ட்டுமின்றி வேறு சில‌ த‌ள‌ங்க‌ளிலும் தெரிய‌வைக்க‌ முய‌ற்சிக‌ள் ந‌டைபெறுகிற‌து.

ப‌கிர்ந்துகொள்ள‌ ப‌ட்டைக‌ள்

உங்க‌ள் இடுகைக‌ளை ப‌ய‌ன‌ர்க‌ள் த‌ங்க‌ள் அபிமான‌ ப‌கிர்ந்துகொள்ளும் த‌மிழ் த‌ள‌ங்க‌ள்க‌ளுக்கான‌ ப‌ட்டைக‌ளை இல‌குவாக‌ சேர்க்க‌லாம். இடுகைக‌ளின் மேல் வேண்டுமா அல்ல‌து கீழ் வேண்டுமா என்று ஆளுந‌ர் தெரிவில் நீங்க‌ளே தெரிவுசெய்து கொள்ள‌லாம். த‌ற்போது இந்த‌ செருக‌லில் உள்ள‌ த‌மிழ் செருக‌ல்க‌ள்: மேலும் அறிய‌: அட‌ தீர்க்க‌மான‌ த‌மிழ் செருக‌ல்

தமிழ் கப்சா

உங்க‌ள் த‌மிழ்ப்ப‌திவில் க‌ச‌டுக‌ள் வ‌ந்து குவியாம‌ல் த‌விர்க்க‌ த‌னித்துவ‌மான‌ த‌மிழ்-ஆங்கில‌ க‌ப்சா. அதாவ‌து த‌மிழிலோ அல்ல‌து ஆங்கில‌த்திலோ தெரியும் க‌ப்சாவை த‌ட்ட‌ச்ச‌லாம். இந்த‌ த‌மிழ் க‌ப்சாவால் ஒரு மென்பொருளால் உருவாக்க‌ப்ப‌டும் எந்த‌ கச‌டுக‌ளும் வ‌ராம‌ல் த‌டுக்க‌ப்ப‌டுகிற‌து. கார‌ண‌ம், த‌ற்போது பாவ‌னையில் இருக்கும் க‌ச‌டு உருவாக்கும் மென்பொருட்க‌ளுக்கு த‌மிழ் தெரியாது. ஆக‌வே உங்க‌ள் த‌மிழ்ப்ப‌திவு முற்றுமுழுதாக‌ க‌ச‌டு அற்ற‌ ப‌திவாக‌ இருக்கும். த‌மிழில் க‌ப்சா தோன்றுவ‌து இது தான் முத‌ல்முறையான‌து அல்ல‌. வேறு ப‌ல‌ த‌மிழ் க‌ப்சா செருகிக‌ள் […]

அட‌டா ஆளுந‌ர் புதுசு

அட‌டா வை புதிய‌ version இற்கு மேம்ப‌டுத்திவிட்டேன் ‍[upgraded]. நீங்க‌ள் அட‌டாவில் ஒரு வ‌லைப்ப‌திவு வைத்திருப்ப‌வ‌ரானால், உங்க‌ள் க‌ண‌க்கில் உட்புகுந்தால் [login], புதிய‌ ஆளுந‌ர் [admin] ச‌லுகைக‌ளைக் காண‌லாம். தைப் பொங்க‌லுக்கு அட‌டா உம் புதிசு.

தேன்கூடு plugin வில‌க்க‌ப்ப‌ட்டுள்ள‌து

தேன்கூடு த‌ள‌ம் இய‌ங்காமையால், தேன்கூடு வ‌லைப்ப‌திவு சேர்க்கை plugin அட‌டா விலிருந்து வில‌க்க‌ப்ப‌ட்டுள்ள‌து. அட‌டாவில் இடுகைக‌ள் மிக‌வும் நேர‌ தாம‌த‌த்திற்குப் பிற‌கே தெரிய‌வ‌ருகிற‌து. ஏன் இவ்வாறு ந‌டைபெறுகிற‌து என்ற‌ சோத‌னையில், தேன்கூடு த‌ள‌மே [www.thenkoodu.com] இய‌க்க‌த்தில் இல்லை என்ப‌து தெரிய‌வ‌ந்த‌து. இத‌ன் கார‌ண‌மாக‌ அட‌டா உருவாக்கின‌ தேன்கூடு வ‌லைப்ப‌திவு சேர்க்கை plugin ஐ வில‌க்கிவிட்டோம். இதைத் தொட‌ர்ந்து அட‌டா வ‌லைப்ப‌திவுக‌ள் வ‌ழ‌மை போல் வேக‌மாக‌ செய‌ற்ப‌டுகின்ற‌ன‌. த‌ட‌ங்க‌லுக்கு வ‌ருந்துகிறோம். ந‌ன்றி அட‌டா

Begin typing your search term above and press enter to search. Press ESC to cancel.

Back To Top
© 2023 - All Right Reserved. | Adadaa logo