Adadaa.net தமிழ் வலைப் பதிவு சேவை ஆரம்பம்!

அன்பார்ந்த தமிழர்களே,

முதற்கண், வருங்காலத்திற்காய் தம் இன்னுயிர் ஈன்ற தமிழ் மாவீரர்களுக்கு என் சிரம் தாள் வணக்கம்.

மாவீரர் நாளில் தொடங்கவே எண்ணியிருந்தேன். ஆனால், சில தடங்கல்கள் காரணமாக தள்ளிப் போடப்பட்டுவிட்டது.

Adadaa.net தமிழ் வலைப் பதிவு சேவை இன்று தொடங்கப்படுகிறது. இந்த சேவையானது WordPress செயலியால் நிறுவப்பட்டது. WordPress என்பது ஒரு இலவச வலைப் பதிவு சேவை. இது Blogger போன்றது. ஆனால், WordPress ஒரு திறந்த வெளி மூலம் கொண்டது. அதாவது, அவர்களுடைய செயலியை இலவசமாக எவரும் நிறுவிக்கொள்ளலாம்.

கடந்த ஒரு மாத காலமாக, WordPress ஐ பல தடவை நிறுவி, பல திருத்தங்கள் செய்து, பல மாற்றங்கள், தமிழுக்காய் செய்து இன்று இந்த Adadaa.net தமிழ் வலைப் பதிவு சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது.

நீங்கள் ஏற்கனவே WordPress வலைப்பதிவு சேவையை உபயோகிப்பவராக இருந்தால், WordPress இல் என்ன வசதிகள் கிடைக்கிறதோ அதில் அனேகமானவை இங்கும் கிடைக்கும். இதற்காக நான் ஒன்றும் பெரிதாகச் செய்யவில்லை. ஏனெனில், இது அவர்களுடைய செயலி தானே!

WordPress இல் இருப்பது தான் இங்கும் என்றால் என்ன வித்தியாசம் என்று யோசிப்பது எனக்குத் தெரிகிறது. நீங்கள் இங்கே வாசித்துக்கொண்டிருக்கும் இந்த இடுகையை நான் தமிழில் தட்டச்சு செய்ய வேறெந்த இணையத் தளத்திற்கும் செல்லவில்லை. நேரடியாக Post / இடுகையிலேயே தட்டச்சுகிறேன். இடுகையின் போது மட்டுமின்றி ஒவ்வொரு இடுகையின் Comments / பின்னூட்டத்திலும் தமிழிலேயே நேரடியாக தட்டச்சு செய்யலாம். ஆகவே, உங்கள் இடுகைக்கு கருத்துத் தெரிவிக்க உங்கள் அபிமானிகள் இனி வேறு ஒரு இணையத் தளத்திற்கு சென்று தட்டச்சு பண்ண வேணுமே என்று சலித்துக்கொள்ள மாட்டார்கள். எங்கே இந்த இடுகைக்கு ஒரு பின்னூட்டம் தான் இட்டுப் பாருங்களேன்!

இதற்காக hiGopi அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இடுகையை ஆரம்பிக்கும்போது, இரண்டு விதமான tab கள் இருக்கும். Visual மற்றும் Code. Code என்னும் tab ஐ சொடுக்கி அதில் தமிழை தட்டச்சு செய்துகொள்ளலாம். FireFox, மற்றும் Internet Explorer உலாவிகளில் இவை வேலை செய்யும்.

வலைப் பதிவு என்ன என்று யோசிப்பவருக்கு ஒரு சிறு சுருக்கம்:
வலைப் பதிவு என்பது நீங்கள் உங்கள் எண்ண ஓட்டத்தில் தோன்றிய அபிலாசைகளை இணையத்தில் இலகுவாகவும், வேகமாகவும் பதிவு செய்து கொள்ள உபயோகிக்கப்படுவது. இதற்கு உங்களுக்கு எந்த இணைய கணினி மொழிகளும் [HTML, PHP] தெரியத் தேவையில்லை.

உங்களுக்கு மின்னஞ்சல் உபயோகிக்கத் தெரியுமா? MS Word செயலியை உபயோகிக்கத் தெரியுமா? இவ்வளவே அதிகமானது. பயப்படாமல், நீங்களும் வலைப் பதிவு ஆரம்பிக்கலாம்.

உங்கள் கருத்துக்கள், எதிர்க் கருத்துக்கள், ஆய்வுகள், விளக்கங்கள், கவிதைகள், கட்டுரைகள் என்று பலப் பல விடயங்களை இணையத்தில் வேகமாகப் பிரசுரிக்க இந்த சேவை பயன்படுத்தப்படலாம்.

உங்கள் எண்ணங்களை எழுத்துக்காகினால் மட்டும் போதாது மற்றவர்கள் உங்கள் ஆக்கத்தைப் பற்றி என்ன கருதுகிறார்கள் என்று அறிய ஆவலா? கவலை விடுங்கள். Adadaa.net வில் இடும் ஒவ்வொரு இடுகைக்கும் [ஆக்கத்திற்கும்] மற்றவர்கள் இலகுவாக கருத்துத் தெரிவிக்கலாம். அதை நீங்கள் தீர்மானிக்கலாம்.

நீங்களே ஒருமுறை Adadaa.net வை சோதனை செய்து தான் பாருங்களேன்.
blog: http://1soothanai.adadaa.net/
username: soothanai
password: thamizha
Login: http://1soothanai.adadaa.net/wp-admin/

தொலை நோக்குப் பார்வை:
வருங்காலத்தில் Adadaa.net தமிழ் வலைப் பதிவு செயலியில் எங்கும் [Post Slug, Categories, etc.] தமிழை நேரடியாக தட்டச்சு செய்யும் வசதி.
Adadaa.net வில் வலைப் பதிவைத் தொடங்கினால், உங்கள் இடுகைகள் தமிழ் மணம், தேன்கூடு என்பன போன்ற வலைப் பதிவுத் திரட்டிகளில் [நீங்கள் சேர்க்காமலேயே] தானாகவே தோன்றும் வசதி.
மிகவும் முக்கியமாக, இந்த Adadaa.net தமிழ் வலைப் பதிவு செயலியை முற்றுமுழுதாக தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும்.

இதற்கு உங்கள் எல்லோருடைய ஆதரவும், உதவியும் வேண்டும். வருகிற தைப் பொங்கல் தினத்தன்று Adadaa.net தமிழில் இருக்க முயற்சிக்கிறேன்.

அன்புடன்,
Adadaa.net அட்டகாசம்

16 thoughts on “Adadaa.net தமிழ் வலைப் பதிவு சேவை ஆரம்பம்!

  1. மிக்க மகிழ்ச்சி..

    ஒரு நாள் விளையாட்டாய் இந்த பெயர் சொல்ல,அந்த பெயரில ஒரு வலை தளத்தை பார்த்த ஆனந்தமாக இருக்கின்றது..

    உங்கள சேவை தொடரட்டும்,,எம்மால் முடிந்த உதவி நிச்சயம் வரும்..

    உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  2. நல்ல தொடக்கம். பாராட்டுக்கள். பின்னூட்டப் பெட்டியில் பாமினி, தமிழ்நெட்99 முறையிலும் உள்ளிட வசதி தந்தால் நன்றாக இருக்கும். இவையும் பெரும்பான்மை தமிழர்களால் கையாளப்படுகிறது. தமிழ்மணம் உள்ளிட்ட இடங்களில் தானே சேர்க்கும் வசதியை ஒரு விருப்பத் தெரிவாகத் தரவும். ஏனெனில் சிலர் இவற்றில் இணையாமல் இருக்கவும் விரும்பக்கூடும். ஆனால், புதியவலைப்பதிவு ஒன்றை இங்கு எப்படி தொடங்குவது என்பது எனக்கு இன்னும் புரிபடவில்லை ???

  3. உங்கள் அனைவரின் பாராட்டிற்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் பல.

    Adadaa.net வை அறிமுகப்படுத்தியது நள்ளிரவு 12 மணிக்கு. மறு நாள் காலை 9 மணிக்கு 23 வலைப் பதிவுகளுடன் 20 பயனர்கள்!

    எனக்கு சந்தோசம் என்பதவை விட அதிர்ச்சியாக இருந்தது.

    என் நினைப்பு எவ்வாறு இருந்தது என்றால். நான் அறிமுகப்படுத்துவேன். இப்போதைக்கு ஒருவரும் ஏன் என்று கூட எட்டிப் பார்க்க மாட்டார்கள். நான் சிறிது சிறிதாக எனது Adadaa.net வை கட்டியெழுப்ப வேண்டும். எதிர்காலத்தில் வருவார்கள் என்பதே.

    அட இப்படி அமோகமான வரவேற்பு கிடைக்கும் என்று தெரிந்திருந்தால் நான் இன்னும் பல மேம்படுத்தப்பட்ட வசதிகள் நிறுவிய பின் அறிமுகப்படுத்தியிருப்பேன். இப்போதே எல்லா இடங்களில் WordPress என்று தான் இருக்கிறது. Adadaa.net விற்கென்றொரு இலச்சினை [logo] கூட செய்யவில்லை [யாராச்சும்?].

    பல முறை கேட்டிருக்கிறேன். பல அனுபவசாலிகள் சொல்வார்கள். மக்கள் என் மேல் வைத்த நம்பிக்கையை குலையாமல் மேலும் மேம்படுத்தி வருங்காலத்தில் செய்ய வேண்டும் என்கிற ஒரு பயம் கலந்த பொறுப்பு தான் இருக்கிறது என்று. அதன் அர்த்தத்தை இப்போது தான் உண்மையில் உணர்கிறேன்.

    உங்கள் ஆதரவும் உதவியும் என்றென்றென்றும் Adadaa.netவிற்கு வளங்க வேண்டும் என்பதுடன் மீண்டும் நன்றிகள்.

  4. ர‌விஷ‌ங்க‌ர் அவ‌ர்க‌ளே,

    “என‌க்கும் ஒரு வ‌லைப் ப‌திவு” என்ப‌தை சொடுக்குக‌.
    http://adadaa.net/wp-signup.php
    என‌க்கும் விள‌ங்குகிற‌து. எவ்வாறு வ‌லைப் ப‌திவொன்றை உருவாக்கி, ஆழுமை செய்வ‌து என்று ஒரு விள‌க்க‌ விப‌ர‌க் கோவை (அ) ஒளிப்ப‌டம் [Flash?] ஒன்று த‌யாரித்தால் ந‌ன்றாக‌த் தான் இருக்கும் [யாராச்சும்?].

    முய‌ற்சி செய்கிறேன்.

  5. Pingback: etamil.net
  6. இந்த‌ புதிய‌ ந‌ல்முய‌ற்சிக்கு என்றுங்க‌ட‌மைப் ப‌ட்ட‌வ‌னாவேன், மேலுமிவ் எழுத்துக‌ள் அனைத்து த‌மிழ் பிள‌க்குக‌ளில் தோண்றுவ‌த‌ன்மூல‌ம் த‌மிழின் த‌ர‌மும், த‌மிழ்க்க‌வி, க‌ட்டுரைக‌ள்,இன்னும் இன்னோர‌ன்ன‌ப‌ல‌ ப‌டைப்புக்க‌ளுக்கு தோழோடு தோள்நிற்கும் போது அட‌டா ‍_ நீயென‌க்குத் தோழ‌ன்,உனஒவ்வோர் எழுத்துக்க‌ளும் என‌து விர‌ல்க‌ள். இந்தஎழுத்துக்க‌ள் என‌து இ.மெயிலிலும் நேர‌டியாக‌க் கிடைத்தால் எப்ப‌டி இருக்கும் என்று யோசித்து பார்க்கின்றேன் அனைத்தும் ந‌ன்றே ஆக‌வும் இந்த‌வ‌ச‌தி க‌ளைஏற்ப‌டுத்திக்கொடுத்த‌ உங்க‌ழுக்கும், அட‌டாவுக்கும் என்விர‌ல்க‌ளில் இருந்து எனித‌ய‌ம்வ‌ரை உள‌மார்ந்த‌ ந‌ண்றிக‌ள் என்றும் உரித்தாகுக‌. இவ்வ‌ண்ண‌ம் +கா.சிவா+(பிறாண்ஸ்)

  7. வ‌டுவூர்குமார் அவ‌ர்க‌ளே “ப‌ய‌ர்பொக் சிலும்”,”எம் மெஸ என் இலும்” அனைத்து த‌மிழ் எழுத்துக்க‌ளுக்கும் மெல் விசிறி போண்ற‌ தோற்ற‌ம் காணுகின்ற‌து கார‌ண‌ம் புரிய‌விலை அவ‌ற்றை மாற்ற‌வேறுவ‌ளிக‌ள் இல‌குவாக‌க்கிடைக‌லாம். கா.சிவா

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image

Related Posts

Begin typing your search term above and press enter to search. Press ESC to cancel.

Back To Top
© 2023 - All Right Reserved. | Adadaa logo