பார்த்துவிட்டேன்.
தமிழ் படம் பார்க்க என்று போகிறவர்களுக்கு சற்று ஏமாற்றமாகத் தான் இருக்கும்.
ஒற்றை வரியில் சொல்வதென்றால், இது ஒரு மர்மம் கலந்த கதை. என்னும் சொல்லலாம், சொன்னால் மர்மம் இல்லாமல் போய்விடும்.
ஒரு ஆங்கில பட விதத்தில் எடுத்து இருக்கிறார்கள். மர்மக் கதை தமிழ் சினிமாவில் பல காலம் கழித்து. நான் படத்திற்கு போகும்போதே இரண்டு பட விமர்சனம் வாசித்தேன். ஒருவர் மிக நன்றென்றார், மற்றவர் அவ்வளவு திறம் இல்லை என்றார். முன்னவர் வெளிநாட்டுக்காரர், பின்னவர் இந்தியாவில் வசிப்பவர். அப்போதே விளங்கி விட்டது, இது தமிழ் சினிமா பாணி அல்ல என்று.
ஆங்கிலம் அதிகமாகவே பேசப்படுகிறது. இன்னும் சொல்லப் போனால், ஆங்கில படங்களில் வருமே ஒரு கெட்ட வார்த்தை அடிக்கடி. தமிழ் படத்தில் இதில் தான் நான் முதன் முதலில் கேட்கிறேன். இடங்களின் பெயர் என்று எழுத்துக்களில் போடும்போது எல்லாம் ஆங்கிலத்திலேயே போடுகிறார்கள். நான் நினைக்கிறேன் இது பல மொழிகளில் மொழி மாற்றம் செய்ய வேண்டும் என்று சிந்தித்து இப்படி செய்திருக்கிறார்கள் என்று. கொடுமை என்னவென்றால், ஆங்கிலம் கதைக்கும்போது எழுத்துக்களாக தமிழில் போடுகிறார்கள். ஐயா அது தமிழா என்று பார்த்து யாராச்சும் சொல்லுங்கோ. சென்னைத் தமிழோ?! ஆங்கில பாடல்களில் வருவதுபோல் கறுப்பிகளின் ஆட்டமும் இருக்குங்கோ 😉 இது வெளிநாட்டுக்காரர்களுக்கு என்றே எடுக்கப்பட்டது போல் இருக்கு.
கமல்காஸனின் படம் எதாவது வித்தியாசமாக மனுசன் செஞ்சிருப்பார் என்று எதிர்பார்ப்போடும் போகாதீர்கள். கமல்காஸனைப் பிடிக்காதவர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சி. ஆனால் கமலுக்கே பிடித்த ஒரு பாத்திரமும் இருக்கு (மனநொயாளி[கள்])
சரி படத்தின் முதல் பாடல் தான் எனக்கு மிகவும் பிடித்தது. அந்த மாதிரி இருந்தது. தமிழ் சினிமாவில் பாதாளத்தில் இருக்கும் காவல்துறையை தூக்கி நிமிர்த்திக் காட்டுகிறேன் என்று தான் கௌதம் ஒரு முடிவோடு இருக்கிறார் போலும். தமிழ் சினிமாவின் துப்பாக்கி சூட்டு சண்டைக்கும் அமெரிக்க சினிமாவின் துப்பாக்கி சூட்டுச் சண்டைக்கும் ஒரு பெரிய வித்தியாசம் இவ்வளவு காலமும் இருந்தது. கௌதம் சரி செய்து விட்டார். சகல பாடல்களும் ரசிக்கத்தக்கவை. இடையில் ஒரு குத்தாட்டம் போல் ஒரு பாடல் வரும். இனிமை தான் இருந்தாலும் கதைக்கு தேவையில்லை என்பது எனது எண்ணம்.
ஊடலில் கமலைப் பற்றி சொல்லவா வேண்டும். மனைவியை அறிமுகப் படுத்தும்போது மனைவி சொல்வார் “இவர் சாப்பாட்டில் மட்டும் தான் வீக் …”. ஐயோ…, கயல்விழி [கமலின் மனைவியாக வருபவர்], கொல்லுராங்க 😉
_____
CAPital
5 comments
விமர்சனம் யதார்த்தம். சர்பும் சர்பு கெடுதலும் இன்றி உல்லதை உள்ளவாறு உரைத்ததாகக் கருதலாம். இன்னும் படம் பார்க்கவில்லை! ஆனால், பார்த்தால் என்ன? என்று ஒரு எண்ணத்தை ஊட்டியது பீலிருக்கிறது.
அன்புடன்
இரவா
“சார்பும் சார்பு கெடுதலுமின்றி உள்ளதை” என்று வாசிக்கவும்.
தட்டச்சும் போதில் பிழைகளை அறிய முடியவில்லை. உனிக்கோடு படிக்க ஏற்றதாக இல்லை.
இரவா
In this movie is very super and particularly for kmal dress and “partha mudhal nala” song are very nice
அருமை நண்பர் கேப்பிட்டல்,
இந்த படம் ஒரு ஆங்கிலப்படத்தின் தழுவல் என்றே கொள்ளலாம், தி போன் கலெக்டர் ( எலும்புகள் சேகரிப்பவன்) என்ற படத்தினை இந்த படம் பார்க்கும் ஒரூவாரம் முன்புதான் தரவிரக்கம் செய்து பார்த்திருந்தேன், அப்படியே ஒத்தி எடுத்திருக்கின்றனர், எப்படி இந்தியில் வந்த கிருஷ் என்ற திரைப்படம் பே செக் என்ற ஆங்கிலப்படத்தின் தழுவலோ அப்படியே, எப்படியோ, கமலின் வயது அப்படியே தெரிகின்றது, ஜோதிகாவின் அப்பா போல தெரிகின்றார் கமல்…இதுவே என் விமர்சனம், புதிய Adadaa.net சேவை முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்…
ஸ்ரீஷிவ்…:)
[…] சரியான கூட்டம். வேட்டையாடு விளையாடுவிற்கு வந்த மாதிரி சனம். […]