பல நாள் எதிர்பார்த்து இருந்த படம். கே. எஸ். ரவிகுமாரின் படம். super star இக்குச் செய்யப்பட்ட கதை என்று பிரபலமாக பேசப்பட்ட படம்.
இரவு 10:00 மணிக்கு படம் என்று 10:30 இக்குத் தான் போட்டார்கள் இங்கு மொன்றியலில் [கனடா]. இது வழமையாகிவிட்டது. ஆனால், திரை முக்கால்வாசி நிரம்பியே இருந்தது.
இரவு 7:30 show பார்த்துவிட்டு வெளியில் வருபவர்கள், நல்ல படம் என்று சொன்னதைக் கேட்டு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அஜித்தின் சற்று முந்தய படங்கள் அத்தனையும் தோல்வியில் முடிவுற்றிருந்தது. சமீகாலத்தில் தான் சற்று ஏறுமுகமாக இருக்கிறது. இருந்தாலும் இப்போது அஜித் முன்புபோல் நடிப்பை வெளிக்காட்டுகிறார் இல்லை என்பது குற்றமாக இருந்தது.
இவ்வளவு இருந்தாலும் “தல” இன் படத்தைப் பார்க்காமல் விட மனமில்லாமல் போனேன்.
முதல் ஐந்து நிமிடத்திலேயே பாட்டு வந்தது. என்ன ஆச்சரியம், அஜித் நன்றாக நடனமாடுகிறார். ஐயோ நான் பரத நாட்டியத்தைச் சொல்லவில்லை. நிஜமாகவே dance ஆடுகிறார். நடன ஆசிரியர் உண்மையிலேயே அஜித்தை ஆட வைத்திருக்கிறார். இதே நடன ஆசிரியர் தான் “வல்லவன்” பட நடன ஆசிரியரும். அஜித்தின் குறையாக எப்போதுமே இருந்தது அவரின் நடனங்கள் பார்க்க சகிக்க முடியவில்லை என்பது தான். ஆகா எடுத்த உடனையே தல ஆச்சரியத்தைக் கொடுத்துட்டாரே என்று கொஞ்சம் நிம்மதியாக உட்கார்ந்தேன். இந்தப் பாடலைப் பார்த்து அஜித்தின் நடனத்தில் நிறைவு காணவில்லையென்றால், இனி நான் கீழ் சொல்லுவனவற்றை நம்பாதீர்கள்.
அஜித் படத்தில் பின்னி எடுத்திருக்கிறார். ஒவ்வொரு வேடமும் தனித்தனியாக மனதில் நிற்கிறது. எல்லாம் கிட்டத்தட்ட ஒரே மாதிரி என்ற சொல்லுக்கே வாய்ப்பில்லை. தகப்பனாக இருக்கட்டும், பரத நாட்டியக் கலைஞனாக இருக்கட்டும், வில்லனாக இருக்கட்டும் பின்னி எடுக்கிறார். பணக்கார இளைஞனாக வருவது தான் இவர்களுடன் ஒப்பிடுகையில் குறைவாக இருக்கிறது. அட வில்லனாக நடிக்கும்போது மற்றய படங்களில் வில்லன் மேல் எப்படி வெறுப்பு வருமோ அப்படி வருகுதப்பா. உண்மையா.
அட முக்கியமாக ஒன்றைச் சொல்ல மறந்துட்டேன். அஜித் “வாலி” படத்திற்குப் பின் இந்தப் படத்தில் தான் “நடித்திருக்கிறார்”. ஆமாங்க, மனிசன் பல கட்டங்களில் மிக நன்றாக நடித்திருக்கிறார். முக பாவனையோடு நடித்திருக்கிறார்.
இந்தப் படத்திற்காக அஜித்திற்கு ஒரு award கண்டிப்பாக கிடைக்கும். [அட நம்ம சேரன் படம் இந்த வருடம் வெளிவராமல் இருந்தால்].
என்னடா எல்லாத்தையும் சொல்லுறான், அந்த பரத நாட்டியக்காரனைப் பற்றி சொல்லவே இல்லை என்று யோசிக்கிறீங்களா? அட நீங்க வேற அதை சொல்லுறதுக்கு தமிழில் வார்த்தையே கிடைக்கலைங்க [கொஞ்சம் ஓவறு?]. அஜித் மிகவும் பாராட்டத்தகாத அபிநயங்களுடன் நடித்திருக்கிறார். அஜித்தால் இப்படியும் நடிக்க இயலுமா என்ற சந்தேகமே வருகுதப்பா. [இந்தக் கதை உண்மையில் super star இற்குச் செய்யப்பட்டதாக இருந்தால் நம்ம super star எப்படி நடித்திருப்பார் என்று புரியவில்லை]. கமல், விக்ரம் அவங்களோட அஜித்தையும் சேர்க்கலாம் போல இருக்குப்பா. மனிசன் நடக்கேக்க, திரும்பேக்க, சிரிக்கேக்க, ஏன் அழேக்க கூட அபிநயத்தோட கலக்கியிருக்கிறார்.
ஆனால், ஒன்றே ஒன்று Matrix ஆங்கில படம் வந்தாலும் வந்துச்சு, எல்லோரும் துப்பாக்கித் தோட்டாவை தங்கள் மேல் படாமல் சரிந்து தப்ப பழகிக்கொண்டார்கள். இது ஒரே ஒரு கட்டம் தான். மற்றபடி ஓகே.
பாடல்கள் அமர்க்களம்.
முற்பாதியில் நிறையவே வரும் அசின், பிற்பாதியில் சற்றுக் காணாமல் போய்விடுகிறார். இருந்தாலும் ஒரு மாதிரியா தான் இருக்காங்க. அஜித்தின் அம்மாவாக வருப ரொம்ப கிழுகிழுப்பூட்டுறா [அட flash back இல அவ இளமை]
என்ன இருந்தாலும், நம்ம கமல்காசனுக்கு அப்புறம் பரத நாட்டிய வேடம் ஏற்று அஜித் தான் நடித்திருக்கிறார் [முன்னணி கதாநாயகன்களில்]. அதுவும் இப்படி ஒரு கதையோடு வேறு ஒரு வரும் நடிக்க வரமாட்டார்கள். தங்கள் image போய்விடும் என்று பயப்பிடுவார்கள். அஜித்தின் டயலாக்குகளும் இல்லை.
எனக்குப் பிடித்த கட்டம்:
ரமேஷ் கண்ணா ஒரு கட்டத்தில் “என்ன காதலுக்கு மரியாதையா என்பார்”. அஜித் ஒரு பார்வை பார்ப்பார். உடனே ரமேஷ் கண்ணா “நீதான் ‘காதல் மன்னன்’ ” என்று சொல்லி சில அஜித்தின் படங்கள் பெயர் சொல்லுவார். கடைசியில் “இவன் ‘அட்டகாசம்’ தாங்க முடியலப்பா” என்று சொல்லுவார். இப்படியும் டயலாக் வைக்க அஜித் அனுமதித்து இருக்கிறார் தனே.
தர்மபுரி ரஜினியாக, சலங்கை ஒலி கமலாக, கடைசியில் “நாயகன்” ஆக முடிகிறது.
குடும்பத்தோடு போய்ப் பார்க்கலாம். ஆபாசக் கட்டங்களோ, அகோரக் காட்சிகளோ இல்லை.
_____
CAPital
6 comments
Nalla review nga.. unmayil thala romba NaaL kalichchu pattaiya kilappi irukkaar
ஐயோ..அம்மா.. கொல்றாங்களே.
nalla review… inda weekend naan padam paathen. “thala pola varuma” types vasanangal ilaama heroism suthama illama nadippuku mukiyathvam kuduthu nalla pannirkaar… thala is back , back with a bang !!!
அய்யோ..அம்மா.. கொல்றாங்களே என்று விஐய் ஏன் தெரியுமா எழுதியிருக்காரு பாவங்க அவரு “தல”யின் வரலாறு படத்தை திரும்ப திரும்ப பாத்துட்டு நல்லா விமர்சனம் எழுத கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்தவரை இளையதளபதி விஜய் ரசிகர்கள் பின்னாடி டைட்டா நாலு சொருவு சொருவியிருக்கானுங்க அதான் இப்படி கத்தி கதரி எழுதியிருக்காரு மற்றபடி நம்ம “தல” படம் செமா…. சூப்பரு…….. ஆனா நம்மல கலாய்த்த விஜய்தான் பக்கா டாபரு
[…] ஒரு படம் » Blog Archive » வரலாறு [Godfather] […]
தல படம்