♩ ♬ காதலே என் காதலே
என்னை என்ன செய்யப் போகிறாய்?
நான் ஓவியன் என்று தெரிந்தும் – நீ
என் கண்ணிரண்டைக் கேட்கிறாய் ♬ ♩
பட video cassete ஐ எடுத்துப் போடும்போது நினைவுக்கு வந்த வரிகள் [இந்தப் பாடல் இந்தப் படப் பாடல் அல்ல]. படம் முழுக்க அந்த இசையின் தழுவல் இருப்பதாக நான் உணர்கிறேன்.
இந்தப் படத்திற்கு “சில்லென்று ஒரு காதல்” என்று பெயர் வைத்திருக்கலாம் போலும். மிக மிக மென்மையாக ஒரு முக்கோண காதல் கதை. எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், எந்த காது வெடிக்கும் இசையோ பாடல்களோ இல்லாமல், வெகு மென்மையான இசையில் படம்.
ஒரு சண்டை கூட படத்தில் இல்லை.
படத்தை பார்த்து முடித்தும் மனதில் ஏதோ ஒரு உணர்ச்சி உருண்டுகொண்டிருந்தது.
ஏற்கனவே அறிந்த கதை தான், இருந்தாலும் பார்க்கலாம். அவ்வளவு இரசிக்கத்தக்கதாக சொல்லி இருக்கிறார் இயக்குனர். காதலிப்பவர்களுக்கு மிகவும் பிடிக்கும். ஜோடியாய் போய்ப் பார்க்கலாம்.
பாடல்களும் நன்றாகவே இருக்கின்றன. இசையமைப்பாளருக்கு ஒர் கைதட்டல்.
திரை அரங்கில் பார்த்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
______
CAPital
2 comments
நானும் பார்த்தேன்….. ஏதோ ஒன்று நம்மை இந்த படத்தில் கவருகிறது அது என்னவென்றுதான் தெரியவில்லை…..
மென்மையான உணர்வுகளை லேசாகத் தட்டி எழுப்பும் காட்சிகள் நிறைந்த படம்தான்…..நீங்கள் சொல்வது உண்மை.