ஒளிநாடாவில் இந்தப் படத்தைப் பார்த்தேன்.
விதியையும் நடிக்க வைத்திருக்கிறார்கள்.
எனக்கு என்னமோ படம் வித்தியாசமாக நன்றாக இருக்கிறது.
ஆனால், இலங்கை பற்றித் தெரியாதவர்களுக்கு ஒரு விசயம் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
படத்தில் கொழும்பு கொழும்பு என்று காட்டும் இடம் அத்தனையும் கொழும்பே அல்ல!
கொழும்பில் மலைகளோ, குன்றுகளோ கிடையாது. இவர்கள் கண்டியையும், அங்குள்ள Botanical Garden இலும் ஹபறணைக்கு அருகாமையில் உள்ள சிகிரிய குன்று/ சிவனொளி பாத மலை இற்கு முன்னாலும் [map] நின்று படம்பிடித்துள்ளார்கள். ஆனால் படம் முழுக்க கொழும்பு கொழும்பு என்று கதைக்கிறார்கள். கடற்கரை மட்டும் கொழும்பு போல் தோன்றுகிறது.
அட கொழும்புக்குப் போனா இவ்வளவு இடங்களைப் பார்க்கலாம் என்று நம்பி ஏமாறாதீர்கள் என்பதற்காகவே இங்கே போடுகிறேன்.
_______
CAPitalZ
1 comment
அதான் படத்தோட தலைப்புலேயே சொல்லி இருக்காங்களே))))