சில்லென்று ஒரு காதல். நானும் ஏதோ ஒரு மென்மையான காதல் கதையாய் இருக்கும் என்று video cassette ஐப் போட்டு பார்த்தன். கலியாணம் கட்டியவர்கள் தான் பார்க்கவேண்டிய படம் போல கிடக்குது.
என்னென்றாலும், ஜோதிகா, பூமிகாவுடன் ஒரு நாளை செலவழி என்று சொல்லி சூர்யாவிடம் விட்டுட்டு போக அவர் அதற்கு பெரிதாக ஒன்றும் எதிர்ப்புக் காட்டாமல் ஆமோதிப்பது என் பார்வைக்கு முற்றுமுழுதாக பிழையாகத் தெரிகிறது.
பூமிகா கேட்டு, கடைசி ஆசை (அ) ஜோதிகாவிடம் கெஞ்சி சூர்வை சம்மதிக்க வைச்சு “ஒரு நாள்” ஐ சிலவழிக்க ஒத்துக்கொண்டிருந்தால் சூர்யா நல்லவராக பட்டிருப்பார். பூமிகாவுக்கு எதாவது பெரிய வருத்தம் இருப்பதாகவும் காட்டி இருக்கலாம்.
மனைவி ஏதோ கேட்கிறாள் என்றால், இவரும் ஆமாம் என்று கழத்தில் இறங்குகிறார். நியாயமாக, இவர் ஜோதிகாவை தடுத்து நிறுத்தி இதற்கு ஒத்துக்கொண்டிருக்கக் கூடாது. இவரும் சம்மதித்து, பூமிகாவுடன் தனியாக இருக்க, அவள் நல்லவளாக இருந்ததால் ஏதும் நடக்கவில்லை. இதில் பூமிகா தான் நல்லவளாக தெரிகிறார்.
சூர்யாவிற்கு தப்பு செய்ய மனைவி சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்து, பூமிகா நல்லவராக இருந்ததால் தப்பு ஏதும் நடக்கவில்லை என்று தான் படத்தில் விளங்குகிறது.
_____
CAPital
2 comments
என்ன நண்பரே, புகுந்து விளையாடுங்க..
இன்னும் விவரமா விமர்சனம் எழுதலாமே…..
வாழ்த்துக்கள்.
நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.
படத்தை திரையில் பார்த்தால் மட்டுமே விமர்சனம் எழுதுவது என்று முடிவாக இருக்கிறேன்.
தொலைக்காட்சியில் பார்த்து என் விவாதக் கருத்தை மட்டும் எழுதலாம் என்று உத்தேசம்.
_______
CAPital