தமிழீழம் எனும் முதல் தமிழர் தனி நாடு உருவாகுவது திண்ணம்.

தமிழீழத்தை மேலும் சிறப்பிக்க உங்கள் சிந்தனையில் உருவாகும் துளிகளை இங்கே இடுங்கள். துளிகள் பெருகி ஆறாகி எங்கள் மண்ணை வளப்படுத்தட்டும்.

போர் சம்பந்தமானதாகவோ, (அ) எதிரிகளை, துரோகிகளை எப்படி அழிப்பது சம்பந்தமானதாகவோ இருக்கக் கூடாது. தமிழீழம் என்ற நாடு முற்றுமுழுதாக உருப்பெற்றுவிட்டது; அப்படிப்பட்ட காலகட்டத்தில் நாடு மேலும் மேம்பட எப்படிப்பட்ட கோட்பாடுகள்/ நடைமுறைகள் தமிழீழ அரசு செயல்படுத்தினால் நல்லது என்பது பற்றிய உங்கள் சிந்தனைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி [email protected]

எப்படிப்பட்ட அரசியல் முறை/ உள்ளுராட்சி/ மாநகராட்சி/ உள்நாட்டு மொழி, கலாச்சார வளர்ச்சி சம்பந்தமான/ வேலைவாய்ப்புச் செயல்முறை/ வெளிவிவகாரக் கொள்கை/ பாதுகாப்புச் சட்டங்கள்/ அன்னியச் செலாவாணி/ அரசாங்க விடுமுறை நாள்/ போக்குவரத்துச் சட்டங்கள்/ வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடு கொள்கை போன்ற பலதரப்பட்ட விடையங்களை நிங்கள் எழுதி அனுப்பலாம்.

தமிழீழத்தைக் கட்டியெழுப்ப வாரீர்.

It is imminent that Tamileelam, first Tamils’ nation, will be constructed.

Please shed your ideas to build a strong and free nation.

Your ideas should neither be about the war nor about how to tackle enemies or betrayers. Imagine the Tamileelam has been formed and send your valuable ideas to [email protected]

Ideas could range from what political system/ cultural or language encouragements/ job preferences/ foreign policy/ money exchange/ government holidays/ traffic system to foreign country companies investment policies.

Let’s erect a strong and free Tamil nation, Tamileelam.

2 Replies to “தமிழீழத்தைக் கட்டியெழுப்புவோம்”

 1. வீதிகள் வடிவமைக்கும்போது வீதியோரப்பாதைகள் வடிவமைப்பது மிக கவனத்தில்கொள்ளவேண்டும்
  நான் மலேசியாவில் ,தாய்லாந்தில் ,சிங்கப்பூரில் இருந்தபோது பார்த்தேன்.
  அவறரில் சில மாற்றம் செய்து எம் நாட்டில் வடிவமைக்க வேண்டும்

  வீதியோரப்பாதைகள் பளிங்குக்கறகளால் வடிவமைப்பது அழகைத்தரும் ஆனால்
  மழை காலங்களில் நீர் உள் செல்ல முடியாமல் வெள்ளப்பெருக்கு ஏற்படும்
  கோடை காலங்களில் அதிக வெப்பம் உண்டாகும்
  இதை நாம் மாற்றி பூக்கற்களால் வீதியோரப்பாதைகள் அமைத்தால்
  அவற்றுக்குள் உள்ளே புற்கள் நடப்படலாம் அதனுடாக நகர வெப்பம்
  குறைக்கப்படும் ,CO2 உறிஞ்சப்படும் O2 வெளிவிடப்ப்படும்போது
  மக்களுக்கான O2 கிடைக்கும் மற்றும் வாகனத்தில் இருந்து வெளிவரும் CO2
  புற்களால் உறிஞ்சப்படும் அதனால் சூழல் மாசடைவது தடுக்கப்படுகின்றது

  மழை காலங்களில் மழை நீர் உறிஞ்சப்படும் போது வெள்ளப்பெருக்கு ஏற்படுவது
  குறைக்கப்படும் மற்றும் அழகைத்தரும்.

  வீதியின் நடுவிலும் பக்கங்களிலும் மரங்கள் நடுவதும் மிகச்சிறந்தது.

 2. காத்திருந்த‌வ‌ன்ப பெண்டாடியை நேற்று வ‌ந்த‌வ்ன் கூட்டிசென்றான். பாத்திருந்த‌வ‌ன் காத்த‌த்த‌வ‌னை ந‌டுநிசியில் எழுப்பிவிட்டான், காத்திருந்த‌வ‌ன் க‌தியென்ன‌ செல்வாய் த‌ம்பி.++கா.சிவா பிறாண்ஸ் ++

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image