Posted on

நம் நாடுகளில் இன்னும் பல ஊர்களுக்கு தமிழில் ஒரு பெயர், ஆங்கிலத்தில் ஒரு பெயர் என்று தானே இருக்கிறது?

அவனுக்கு வாயில் நுழைவதற்காக நாம் இன்னும் மாற்றாமல் இருக்கிறோம். அதே ஊர்க்காரன் ஒருவனிடம் முகவரி கேட்டு வருபவர் ஆங்கில பெயரைக் கேட்டால் ஊர்க்காரன் முழிப்பான். ஊர்க்காரனுக்கு ஆங்கிலம் தெரியாது என்று மற்றவர்கள் பழிப்பார்கள். ஏன்? யேர்மனியில், பிரான்சில், சப்பானில் என்ன தங்கள் ஊர்களின் பெயரை இப்படி இரு வேறாக பிரித்து வைத்திருக்கிறார்களா என்ன? நாம் இன்னும் அடிமைகளாக வாழ்ந்து அடிமைகளாக சிந்திக்கிறோம்.

பருத்தித்துரை = Point Pedro
மட்டக்களப்பு = Batticaloa
யாழ்ப்பாணம் = Jaffna

இப்படி பல ஊர்ப் பெயர்கள் தமிழில் ஒன்றாகவும் ஆங்கிலத்தில் ஒன்றாகவும் இருக்கிறது.

கனடாவில் கியூபெக் என்னும் பிரஞ்சு மக்கள் அதிகமாக குடியிருக்கும் மாகாணத்தில் உள்ள சில ஊர்ப் பெயர்கள்:

Notre-Dame-De-Lorette
Dollard-Des-Ormeaux
Côte-St-Luc
L’Ascension-De-Notre-Seigneur
Pierrefonds
Montréal

நாங்கள் சுதந்திரம் பெற்றுவிட்டோம் என்று மார்தட்டிக் கொண்டாலும் இன்னும் அடிமைக் குணம் போகவில்லையே.

தமிழீழத்தில் ஊர்ப் பெயர்கள் அந்த ஊரின் உண்மையான தமிழ்ப் பெயரிலேயே ஆங்கிலத்திலும் அழைக்கப்பட வேண்டும். மிகவும் நீளமான பெயர்கள் என்று கணிப்பிட்டால், தமிழ்ப் பெயரில் வரும் சொற்களில், அதிகமாகப் பயன்படுத்தப்படும் முதற் பாதி (அ) இறுதிப் பாதி சொல்லை ஆங்கிலத்தில் அழைக்கலாம். இது ஆங்கிலம் தெரியாதவர்களுக்குக் கூட தனது ஊரின்் பெயரைப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும்.

வீதிகளின் பெயர்களும் இவ்வாறே அமையவேண்டும்.

வீதிகளுக்கு மாவீரர்களின் பெயர்களைச் சூட்டலாம். அந்த தெருவில் வசித்த (அ) அந்த தெருவில் நடந்த சண்டையில் வீரச்சாவடைந்த முக்கியமான ஒரு மாவீரரின் பெயரைச் சூட்டலாம். எக்காரணங்் கொண்டும் அந்த தெருவிற்கு சம்பந்தமில்லாத மாவீரரின் பெயர் சூட்டப்படக்கூடாது.

மாவீரரின் பெயரை ஊர்ப் பெயருக்கு வைக்கக் கூடாது. எப்பொழுதும் ஊர்ப் பெயர் அந்த ஊரின் பொதுவான செயற்பாட்டை குறிக்குமுகமாக (அ) முக்கிய பூகோழ சின்னங்களுக்காக வைக்கப்படலாம்.

சேர்க்கப்பட்டது I [2007/07/19 @ காலை 9:00 GMT-5]:

எதிர்காலத்தில், ஊர்ப் பெயர், வீதிப் பெயர் மாற்றம் செய்யவேண்டும் என்றால், அது ஒரு இலகுவான காரியமாக அமையக் கூடாது.  பல கட்ட செயற்பாடாக, பல அனுமதிகள் பெறவேண்டியதாக இருத்தல் வேண்டும்.   பெயர் மாற்றப்பட்டு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு [50 வருடங்கள்?]  மறுபடியும் பெயர் மாற்றம் கொண்டுவர முடியாததாக இருத்தல் வேண்டும்.  இல்லையேல் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை என பெயரை மாற்றிக்கொண்டே போய்விடுவார்கள்.

9 Replies to “தமிழில் ஊர்ப் பெயர்”

  1. 1.ப‌ருத்தித்துறை _PRUTHTHI THU RAI. 2.MDDA KALLAPPU _ ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு 3. யாழ்ப்பாண‌ம் _ YAALP PAANAM 4. 4.VAYAVILAN _வயாவிளான். தவ‌றான‌ பாவ‌னையும் ந‌டைமுறை எழுத்தும் உச்ச‌ரிப்புக்க‌ழும் பின்வ‌ருமாறு:_ (1.உண்மை பெய‌ர் “” வ‌யாவிளான் _VAYAVILAN””) உண்மைக்குப் புற‌ம்பான‌ பெய‌ர்க்ள்:_ !!!!!!!!!!!!வசாவிளான்VASAVILAN!!!! ????.!!!..ப்ருத்தித்துறைPOINT PEDRO!!!?????.!!!..ம‌ட்ட‌க்க‌ள‌ப்புBATTICALO!!!????…!!!யாழ்ப்பாண‌ம்JAFFNA.!!!????? இது போன்று இன்னும் ப‌ல் உண்டு மீத‌மாக‌ உள்ள‌ வ‌ற்றை பின்பு எழுதுகின்றேன் இந்த‌ எழுத்துக்க‌ளை நாங்க‌ள் எழுதுங் அஞ்ச‌ல்(க‌டித‌ம்,த‌பால்) முக‌வ‌ரிப்பாவ‌னையில் உப‌யோகித்தால் தானாக‌ மாற்ற‌ப்ப‌ட்டுவிடும் இது ஆங்கிலேய‌னின் வாய்க்குள் நுளைவ‌த‌ற்காக‌ ஏற்ப‌டுத்திக் கொண்ட‌ ஒன்று இன்னும் ஏன்விட்டு வைக்கிறீர்க‌ள்? இதுவும் எங்க‌ள்த‌வ‌று ஏன்புரியாது இருக்கின்றார்க‌ளோ அவ‌னுக்குத்தான் தெரியும், இவ்விட‌ய‌த்திலாவ‌து திருந்துவாக‌ளோ இருந்துபார் போம் பாருங்க‌ள். இவ்வ‌ண்ண‌ம்கா.சிவா,பிறாண்ஸ்.நன்றி

  2. த‌ய‌வு செய்து ஒட்டுண்ணி வாழ்க்கை யென‌வாழ்வோர் தாம் ” வ‌யாவிளான் ” VAYAVILAN” எனும்பெய‌ரைப் புற‌க்க‌ணிப்பின் ச‌ற்றுச் சும்மாஇருந்து விட‌ல்ந‌ன்றேயாம் எண்று அன்புட‌ன் வேண்டிக்கொள்கின்றேன். இவ்வ‌ண்ண‌ம்:‍ கா.சிவா (பிறாண்ஸ்)

  3. ஓர்ம‌க‌ற் கி(இ)ரு தாயானால், ஓர்ரூ(ஊ)ற் கி(இ)ரு பெய‌ராய், ஆத‌ல‌து முறையே யாம், ஆத‌லினாற் தாயொருத்தி தானிருக்க‌, த‌ந்தைக் கோர் தார‌ம், தேடுமொரு வ‌ற்க‌ந் தானெத‌ற்கு, என்ற‌றியாத் திண‌றுகின்றேன் க‌ண்ணா, ஆத‌லினாற் தான் தெரிந்தோர், அன்புட‌னேச‌ற்று விள‌க்கிடுத‌ல் ந‌ன்றேயாம். “முறையேயாம்” @ இவ்வ‌ண்ணம்:‍ கா.சிவா + பிறாண்ஸ்+

  4. யாழ்ப்பாண‌ம் வ‌லி வ‌ட‌க்குப் ப‌குதியில் வ‌யாவிளான் என்னும் ஊரின் வ‌யாவிளான் வ‌ட‌க்கு P-Code:-4112170. வ‌யாவிளான் கிழ‌க்கு P-Code:-4112165. ப‌லாலி தெற்கு, வ‌யாவிளா‌ன்.(தோல‌க‌ட்டி,கொட்ட‌க‌ப்புல‌ம்)உட்ப‌ட‌ P-Code:-4112205. வ‌யாவிளான் இர‌ட்டைத்தொகுதி என்ப‌துமிக‌வும்குறிப்பிட‌ற்குரிய‌து (1).காங்கேச‌ன் துறைத் தொகுதி. (2).கோப்பாய் தொகுதியாகும். இவைஅட‌ங்க‌லும் மயிலிட்டி கிராம‌ச‌பைக்குரிய‌ வ‌ட்டார‌ங்க‌ளாகும் (13 வ‌ட்டார‌ங்க‌ளென்ப‌து குறிப்பிட‌ற்குரிய‌து). இத‌ன்கூட்டுற‌வு வினியோக‌ங்க‌ள் அனைத்தும் தெல்லிப்ப‌ளை கூட்டுற‌வு ச‌ங் க‌த்தினுடைய‌வை என்ப‌து குறிப்பிட‌ற்குரிய‌து.++கா.சிவா(பிறாண்ஸ்)++
    வ‌யாவிளான்
    =========

  5. ப‌லாலி/வ‌யாவிளான் விமான நிலைய‌ம்
    ==========================
    தொட‌ர்பாக‌ விக்கிமீடியா பின்வ‌ருமாறு
    ===========================
    PALALY/ VAYAVILAN AIR-PORT
    ===================
    Palaly / Vayavilan Air -Port Code / JAF / VCCJ Is a sri-lanka Air Force base Located near the Jaffna in Sri -Lanka.The base was built by the RAF during World War 2. When B-24 Liberators Were based there.
    +Reference :- Wikimedia Fondation.201O+
    France:- PALALY/ VAYAVILAN Aéroport
    ==================
    Aéroport de Codes / JAF / VCCJ est du Sri – Lanka Air Force base sutée prés de la ville de Jaffna ( The tamil:- YAALPPANAM) dans Sri – Lanka. La base a éte Construite par le RAF au Cours Seconde Guerre Mondiale lorsque B – 24 Liberator étaient basés la – bas.
    + Références :- Wikimedia Foundation 2010. (Groupe 222).
    @@+ கா.சிவா(பிறாண்ஸ்) +@@

  6. ஆங்கிலேய‌ர் ஆதிக்க‌த்தின் போது விமான‌ நிலைய‌த்திற்கு எடுக்க‌ப்ப‌ட்ட‌ வ‌யாவிளான் காணிக‌ளின் விப‌ர‌ங்க‌ள் பின்வ‌ருமாறு:‍
    (1) . விளாத்திய‌டி. (2). அருகு. (3). நெர‌ங்க‌சிட்டி.
    (4). தேளான் வெளி.(5).குள‌க்க‌ரை.(6). வாகுப‌னை.
    (7). ம‌ல்ல‌ம்பாதி. (8). வேள்ளுருவை.(9). வ‌ன்னிய‌ங்கா வெட்டி.
    (10). சூடுக‌ட்டுவ‌ன். (11). காட்டுக்குடியிருப்பு. (12).ச‌குனிய‌(யா) ர்கிண்த்த‌டி. (13). விளாங்காடு. (14). ஒல்லை. இவிட‌ங்க‌ளில் குடியிருப்புக்க‌ளுட‌ன் விவ‌சாய‌மும் செய்ய‌ப்ப‌ட்டுவ‌ந்த‌து என்ப‌து குறிப்பிட‌ற்குரிய‌து. இவ்விட‌ ம‌க்க‌ள் வ‌லுக்க‌ட்டாய‌மாக‌ வெளியேற்ற‌ப்ப‌ட்ட‌ன‌ர். இந்த‌வெளி யேற்ற‌த்தைஎதிர்த்து
    (அ). க‌ந்த‌ன். (ஆ). முத்த‌ன். என்ற‌ சுதேசிக‌ள் கொல்ல‌ப்ப‌ட்ட‌ன‌ர்.
    இப்போராட்ட‌த்தின் ம‌த்தியிலும் + சாத்திரியார் என்ற்ழைக்க‌ப்ப‌டும் :‍ திரு. வ‌ன்னிய‌ர். க‌திரிப்பிள்ளை என்ப‌வ‌ர் ம‌ட்டுமே அக‌ல‌ம‌றுத்துவிட்ட‌வ‌ரென்ப‌து குறிபிட‌ற்குரிய‌து.
    இன்றும் வெள்ளைய‌ர் கால‌த்துனிலைபோன்று குடிபெய‌ர்ந் திருப்ப‌து க‌வ‌லைக்குரிய‌ தொன்று “”” வ‌யாவிளான்”””” எப்போ புத்துயிர் பெறும் ?…
    +++ கா.சிவா(பிறாண்ஸ்) +++

  7. ஓ(ஊ)ரூர் இரு நாட் டொ(ஒ)த்த‌ பெய‌(உ)ருடை(ய‌)ப்
    ======+===+=======+===+=============
    புல‌வ‌ர்க‌ள் இ(ளி)ரு க‌.வேலுப்பிள்ளை க‌ள்.
    =======+======+===============
    “” சிங்கை முருகேச‌ர் பேரில் ப‌திப்ப‌க‌ம்”” 1893 ல் நாட்டுக் கோட்டை செட்டிப்பிள்ளைக‌ள் கேட்டுக் கொண்ட‌த‌ற்கிண‌ங்க‌ சிறீல‌ங்காவின் வ‌ட‌மாகாணாம்:‍ யாழ்ப்பாண‌த்தின் வ‌யாவிளானை பிற‌ப்பிட‌மாக‌க்கொண்ட‌ ம‌.க‌.வேலுப்பிள்ளை அவ‌ர்க‌ளால் இய‌ற்ற‌ப்ப‌ட்டு வ‌ட்டுக்கோட்டை ச‌.பொன்ன‌ம்ப‌ல‌ம் பிள்ளை அவ‌ர்க‌ளால் சிங்க‌ப்பூர் தினோத‌யா வேந்திர‌சாலையில் ஜ‌ன‌வ‌ரி:‍1893 ல் நூலாக‌ வெளியிட‌ப்ப‌ட்ட‌து.
    இன்நூல் சிங்க‌ப்பூர் நாட்டுக்கோட்டை செட்டிக‌ளால் தோற்றுவிக‌ப்ப‌ட்ட‌ ” முருக‌ன் திருத்த‌ல‌த்தில்” பேரிற்பாட‌ப்பெற்ற‌ 10 பாதிகங்க‌ளும் திருவூஜ்ச‌ல், கீத்த‌ன‌ம்,ப‌த‌ம்,ஜாவாளி இச்சிறுநூலில் அட‌ங்கியுள்ள‌து. இன்நூல் இன்று இகோயிலின் முக்கிய‌கீர்த்த‌ன நூலாக‌வுள்ள‌து என்ப‌து குறிப்பிட‌ற்குரிய‌து.
    இக்கட்டுரை:‍ ம‌லேசிய‌(த்)த‌மிழ் நூல் வெளியீட்டில் என்:‍செல்வ‌ராஜா, நூல‌க‌விய‌லாள‌ர்,ல‌ண்ட‌ன்.(வ‌ல்லின‌ம்.கொம்)கும் ந‌ண்றிக‌ள்வித்தாகுக‌.(வயாவிளான்:‍கா.சிவா).
    17ம் நூற்றாண்டுக‌ளிலவாழ்ந்தசிற்றில‌க்கிய‌ப்புல‌வ‌ர்க‌ளுள் வ‌யாவிளான் திரு:க. வேலுப்பிள்ளை யுமா(ஆ)வார். இவ‌ர‌து பெய‌ரை அனைவ‌ரும் க‌ல்ல‌டி வேலுப்பிள்ளை என்ற புனைபெய‌ருட‌ன் அழைப‌து வ‌ழ‌க்க‌மாக்யுள்ள‌து இவ‌ர‌து ப‌டைப்பிய‌ல் க‌ள் 1860 ‍ 1944 கால‌ப்ப‌குதிக‌ளாகும் என்ப‌து குறிப்பிட‌ற்குரிய‌து. +++ கா.சிவா(வ‌யாவிளான்)+++

  8. வ‌ந்துக‌வியாத்த‌கால‌ம் 19.
    ===============+ =
    வ‌யாவிளான் ம்ண்ணிளொ(ஒ)ரு ச‌ர்மா
    +(அப்பாச்சாமி ஜ‌ய‌ர்)+
    வ‌ந்துக‌வி யாத்த‌வொ(ஒ)ரு நூலாய்
    சென்ற‌ப‌ல‌ நூற்றாண்டூ 19 ல்
    அன்னிய‌ரி(ன்) நு(உ)ச்ச‌ரிப்பை
    இட‌ப்பெய‌ரா(ய்) யி(இ)ட்டு
    ???!!! இருப‌துதான் புதுமை !!!! ??
    °°° °°° °°°
    புல‌வ‌ர் க‌ல்ல‌டி வேலுப்பிள்ளை
    இருந்தத‌‌க்கா(ல்) லெ(எ)ழுதிய‌ கால‌ம்
    க‌னிவாக‌ வ‌யாவிளா(ன்) னென்று
    எழுதிய‌(து) த‌க்கால‌ம்
    °°° °°° °°°
    இவ‌ர்வேறா(ய்) யா(ஆ)கிய‌தால்
    அந்த‌ண‌ர்தா னி(இ)ப்புவியிற் பூச‌க‌ராய்
    அன்றன்று வ‌ந்துதொழில் புரிந்த‌த‌னால்
    இட‌ப்பெய‌ரை வேறாய் யெ(எ)ழுதின‌ரோ?
    +++ +++ +++
    என்றும‌ன‌(ம்) மெ(எ)ண்ணத் தோண்றும்
    இருந்திடினும் வ‌யாவிளான் ச‌ர்மா
    க‌விதைக‌(ள்) ளெ(எ)ன்றோர்
    பெய‌ருட‌னே இவ்விட‌த்தை ஆக்குகின்றேன்
    +++ கா.சிவா(பிறாண்ஸ்) +++

    §

    §
    °° °° °°

  9. வ‌யாவிளான் ம‌த்திய‌ ம‌காவித்தியால‌ய‌ம்
    ===========++========++========
    யாழ்‍:‍ ‍‍‍‍‍குரும்ப‌சிட்டி,புன்னாலைக‌ட்டுவ‌ன்,குப்பிளான்,க‌ட்டுவ‌ன், ப‌லாலி,ம‌யிலிட்டி,இன்னும் ப‌ல‌ ஊர் மாண‌வ‌ர்க‌ள் இந்த‌ ம‌காவித்தியால‌ய‌த்தில் மூல‌ம் சிற‌ந்த்க‌ல்விமான்க‌ளாக‌ உருவாகி இன்று அகில‌ உல‌கில் முன்ன‌ண்வ‌கிக்கிண்றார்க‌ள் என்ப‌து குறிப்பிட‌ற்குரிய‌து.இந்த‌ ம‌காவித்தியால‌ய‌த்தில் எனைய‌ க‌ல்லூரிக்ளைவிட‌ விவ‌சாய‌ம்,க‌லை,அறிவிய‌ல் இன்னும் இன்னோர‌ன்ன‌ துறைக‌ளில் மாண‌வ‌ர்க்ளை உருவாக்கியிருக்கிண்றது இந்த‌வித்தியால‌ய‌ம் வ‌ட‌மாகாண‌த்தின் முத‌லாந்தர‌‌ க‌ல்வி நிலைய‌ம் என்ப‌தை இல‌ங்கை அர‌சு ந‌ன்குபுரியும், ந‌ம‌து வ‌ட‌மாகாண‌ அர‌ச‌ அதிப‌ர் இக்க‌ல்வி நிலைய‌த்தை வெகுவிரைவில் திற‌ந்து வைப்ப‌த‌ற்கு தாம‌திப்ப‌து ஏன் என்ப‌துபுரிய‌வில்லை. க‌ல்வி(யி) இல்லாஊரும் ‍கோயில்(இ)லில்லாஊரும் நாட்டுக்கு ந‌ன்ற‌ண்று ஆத‌லால் வெகுவிரைல் திற‌ ந்துவைக்கும் வ‌ண்ண‌ம் அன்புட‌ன் வேண்டிக்கொள்ளுகிண்றேன்.
    ++++ வ‌யாவிளான் கா.சிவா ++++

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image