திரை இல்லாமல் 3D ப‌டம்

திரை இல்லாமல் முப்பரிமாணப் [3D] ப‌டம் காண்பிக்கலாம்.

இப்போது எவ்வாறு திரையில் காண்பிக்கப்படுகிறது?

ஓவ்வொரு படமும் பல கோடி புள்ளிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு ஒளிக்கீற்று ஒவ்வொரு புள்ளிக்கென்று முன்பிருக்கும் திரையில் பாய்ச்சப்படுகிறது. அந்த ஒளிக்கீற்று படும் இடத்தில் அந்த புள்ளி உருவாகிறது. இப்படி பல கோடிப் புள்ளிகள் உருவாகும்போது சாதாரண கண்களுக்குப் படமாகத் தெரிகிறது.

ஆனால், திரை இல்லாமல் எப்படி செய்வது?

ஒரு பக்கத்திலிருந்து ஒளிக்கீற்றை பாய்ச்சி அடிக்காமல், எல்லாப் பக்கத்திலிருந்தும் ஒளிக்கீற்றைப் பாய்ச்சி அடித்தால்?

அதாவது, ஒரு வட்டமாக ஒளிக்கீற்று பாய்ச்சிகளைப் பொருத்த வேண்டும். நடுவில் பிம்பம் தெரிய வைக்கலாம். இது ஒரு முப்பரிமாண பிம்பத்தை உருவாக்கும்.

எங்களுக்கு எங்கே புள்ளி உருவாக வேண்டுமோ [அதாவது on the air – no screen], அதை நோக்கி இந்த ஒளிக்கீற்று பாய்ச்சிகளை பாய்ச்ச வேண்டும். இரண்டு மூன்று ஒளிக்கீற்றுகள் ஒரு புள்ளியில் சந்திக்கும்போது அதில் ஒரு புள்ளி உருவாகும். பிறகென்ன, ஒரு பிம்பமே இப்படி உருவாக்கலாம்.

ஆனால் இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. என்ன அது?

ஒரு ஒளிக்கீற்று ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வேறு ஒரு ஒளிக்கீற்றை சந்தித்தால் அங்கும் புள்ளி உருவாகிவிடுமல்லவா?

வெவ்வேறு விதமான ஒளிக்கீற்றுகளை உருவாக்கலாம். அதாவது X, Y மற்றும் Z என்று மூன்று விதமான ஒளிக்கீற்றுகளை உருவாக்கலாம். இந்த மூன்று வித்தியாசமான விஞ்ஞான பூர்வமான ஒளிக்கீற்றுகள் ஒன்றோடொன்று சந்திக்கும்போது ஏதாவது விஞ்ஞான மாற்றம் ஏற்பட்டோ (அ) ஏற்படாமலோ புள்ளிகள் உருவாக வைக்கலாம். அப்போ தவறுதலாக புள்ளிகள் உருவாகுவதைத் தவிர்க்கலாம்.

இருந்தாலும் முற்றுமுளுதாகத் தவிர்க்க இயலாது. ஒரு புள்ளியை உருவாக்கிய X, Y மற்றும் Z என்று மூன்று விதமான ஒளிக்கீற்றுகள் அத்தோடு முடிந்து விடாதே. அவை இன்னும் பிரயாணிக்கப் போகின்றன [கவனிக்கவும் இங்கே ஒளிக்கீற்றுகளை நிறுத்த திரை இல்லை].

அதற்கு இப்படி X, Y மற்றும் Z என்று மூன்று விதமான ஒளிக்கீற்றுகள் சந்தித்த உடன் அவை அழிந்துபோகக் கூடியவாறு [ஏதாவது விஞ்ஞானபூர்வமாக] தயாரிக்கலாம்.

கிட்டத்தட்ட இப்படி இருக்கும்:

முப்பரிமாணப் [3D] ப‌டம்

பிறகென்ன ஒருபக்கம் திரை மறு பக்கம் பார்வையாளர்கள் என்று இல்லாமல், மக்கள் 360 பாகையாக, வட்டமாக சுற்றி இருந்து முப்பரிமாண படங்களைப் பார்த்து மகிழலாம்.

1 thought on “திரை இல்லாமல் 3D ப‌டம்

ஜ் உடைய கருத்துக்கு மறுமொழியிடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image

© 2023 - All Right Reserved. | Adadaa logo