பல நிற ஒரு பெயின்ற்
வீட்டுக்கு நீங்கள் பெயின்ற் வாங்கும் போது உங்களுக்கு விருப்பமான பெயின்றைக் கஷ்டப்பட்டு தெரிவுசெய்து அடிப்பீர்கள். அந்தக் நிறம் பல வருடங்களுக்கு அப்படியே இருக்கும். சலிப்பாகிவிட்டால் திரும்பவும் ஒரு பெரிய செலவு/ வேலை.
ஒரு பெயின்ற் ஆனால் அது நிறம் மாறும். அப்படி ஒன்று இருந்தால் எப்படி இருக்கும்?
இது விஞ்ஞான ஆராய்ச்சியாளர்களே இதைச் செய்ய முடியும்.
அதாவது சுற்றுப் புறச் சூழலின் வெட்ப தட்ப நிலைகளுக்கு ஏற்ப நிறம் மாறக்கூடிய பதார்த்தங்களை பெயின்றில் கலக்கலாம். நன்கு வெக்கையான நேரங்களில் கறுப்பு நிறமாகவும், நன்கு குளிர்மையான நேரங்களில் வெள்ளை நிறமாகவும் மாறுவது போல் செய்யலாம். இந்த இரண்டு நிறங்கள் மட்டுமல்ல, வேறு பல நிற பெயின்ற் கூட தயாரிக்கலாம்.
நீங்கள் உங்கள் வீட்டிற்கு பெயின்ற் அடிக்கிறீர்கள்.
காலையில் மங்களகரமாக, மஞ்சள் நிறம்
மதியம் ஒரு நீல நிறம்
பின்னேரம் ஒரு பச்சை நிறம்
இரவு ஒரு வெள்ளை நிறம்
அட மழை பெய்தால் அது மண்ணிறம் [நீர் சேர்ந்தால் நிறம் மாறும் பதார்த்தம் சேர்க்க வேண்டும்]
அட இவ்வளவு நிறங்கள் மாறுவது உங்களுக்கு பிடிக்கவில்லையா. சரி உங்களுக்கு எப்போது நிறம் மாற வேண்டுமோ அப்படி தயாரிப்பது தானே.
கிட்டத்தட்ட இதே மாதிரியான இன்னுமொரு ஐடியா: பல நிறங்கள் மினுங்கும் ஒரு பெயின்ற்