பல நிறங்கள் மினுங்கும் ஒரு பெயின்ற்
ஏற்கனவே பல நிற ஒரு பெயின்ற் பதிவைப் படித்திருந்தால் இந்த ஐடியா கிட்டத்தட்ட அதே மாதிரித் தான்.
பெயின்றில் மினுங்கும், அதாவது வீட்டிற்கு பெயின்ற் அடித்தால், அதை எந்த திசையில் இருந்து பார்ப்பது என்பதைப் பொறுத்து அதன் நிறம் வேறுபட்டுத் தெரிய வைக்க, பதார்த்தம் சேர்க்க வேண்டும்.
நான் திசை என்றவுடன் என்ன வடக்கு கிழக்கு என்று சாத்திரம் போல் இருக்கிறது என்று வாஸ்து சாத்திரியாக எண்ண வேண்டாம்.
பார்ப்பவர் நிற்கும் angle ஐப் பொறுத்து அடித்த பெயின்றின் நிறம் மினுங்கும். இங்கு கனடாவில் சில மோட்டார் வண்டி [car] களிற்கு இப்படி பெயின்ற் அடித்திருக்கிறார்கள். ஓடிக்கொண்டு போகும் போது நிறங்கள் மாறி மாறி மினுங்கும்..
இப்படியான நிற மினுங்கலை நீங்கள் விளம்பர அட்டைகளில் கண்டிருக்கலாம். சில மட்டைகளை கையில் வைத்து அப்படி இப்படி என்று அசைக்கும் போது அதன் நிறம் மாறி மாறி மினுங்கும். அட அதைத் தானுங்க சொல்லுறன்.