“ஐடியா மணி” எண்டால்?
ஐடியா மணி என்றால், பல புதிய சிந்தனைகளைச் சொல்பவர், ஆனால் எதையும் தானாக செய்ய மாட்டார்.
அது தாங்க free அட்வைஸ்.
ஆனால், இந்த வலைப்பதிவு சும்மா அட்வைஸ் இல்லைங்க. ஏதாவது ஒரு சுய முயற்சி (அ) சுய தொழில் தொடங்க/ கட்டியெழுப்ப கூடிய “idea” கொடுக்கிற இடமாக இருக்கும்.
உங்களுக்கும் ஏதாவது சுய தொழில்/ புதியதாக ஏதாவது தொடங்க ஒரு ஐடியா வந்தா எனக்கு எழுதுங்கோ.
அட எண்ட ஐடியாவ நீங்க கேட்டு ஒரு தொழில் தொடங்கி பெரியா ஆளா வாரதில எனக்கு என்ன லாபம் என்று யோசிக்கிறியளோ?
அது தானே சொல்லீட்டனே முதலிலே, எனக்கு செய்ய ஏலாம/ நேரம் கிடைக்காத விசயத்தைத் தானே நான் இதுல போடுறன். அப்படி உங்களுக்கு இதுல ஏதாவது ஒரு ஐடியா பிடித்திருந்து அதில் என்னையும் பங்குதாரரா சேர்க்க விரும்பினாலும் எனக்கு மகிழ்ச்சி தான்.
சரி அப்படி என்ற ஐடியாவைக் கேட்டு நீங்கள் தொழில் தொடங்கினால், ஒரு சின்ன உதவி மட்டும் செய்யுங்கோ. இந்த வலைப்பதிவு முகவரியை உங்கள் இணையத்தளத்திலோ (அ) வேறு எங்காவதிலோ குறிப்பிடவும். அப்படி எண்டாலும் என்ற வலைப்பதிவிற்கு கொஞசம் ஆக்கள் வரட்டுமேன் என்ன.
நன்றி வணக்கம் _/|\_
2 Comments
susee
Good ideas
radha
Very smart ideas