பாராளுமன்றம்
-
சனாதிபதி/ பாராளுமன்றத் தேர்தல்
சனாதிபதிப் பதவியோ வேறு எந்த தேர்தலில் போட்டியிட்டு வரும் பதவியோ இத்தனை தடவைக்கு மேல் போட்டியிட முடியாது என்று இருத்தல் கூடாது. அமெரிக்க சனாதிபதி இரு தடவைக்கு மேல் தெரிவுசெய்யப்பட இயலாது. இப்படியான சட்டங்கள், உண்மையான நல்லவர்களைத் தான் தடுக்கின்றன. கெட்டவர்கள் வேறு குறுக்கு வழி கண்டுபிடித்துவிடுவார்கள். இலங்கையில் முன்பு நடந்தது போல், சனாதிபதித் தேர்தல் நடத்த வேண்டுமா வேண்டாமா என்று ஒரு தேர்தல் கொண்டுவந்தார்கள். இதனால் காலம் இன்னும் நீடிக்கப்பட்டது. அப்படி இல்லையென்றால், இராணுவ ஆட்சி (அ) அவசர கால நிலை என்று ஏதாவது சொல்லி ஆட்சியைத் தக்கவைப்பார்கள். ஆனால், உண்மையிலேயே நாட்டுக்கு நல்லது செய்தவர்கள் சட்டத்திற்கு கட்டுப்படு விலகி நாட்டுக்கு நட்டமாகிப்போய்விடும். மகாத்மா காந்தி சொன்னது போல் 1000 குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது. ஒன்றை யோசித்தீர்களா? ஏன் சனநாயகத்தில் அரசியல் கட்சிகள் அவசியம் என்று? உங்கள் வட்டாரத்தில் ஒருவருக்கு வாக்குப் போட ஆசை, ஆனால், அவரின் கட்சி குளறுபடி. அதே போல், இந்தக் கட்சிக்கு வாக்குப் போட…