கல்வி
-
மேல் வகுப்புக்கு முன்னேற்றம்
பாடசாலையில், அறிவு கூடிய மாணவர்கள் என்று கணிக்கப்படும் மாணவர்கள் மேல் தர வகுப்புக்கு காலம் கடத்தாமல் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். [fast tracking] நாங்கள் நவீன யுகத்தில் இருக்கிறோம். எங்களுக்கு முன் கண்டறிந்த எல்லாவற்றையும் மாணவர்கள் கற்று பின்னரே மாணவர்களால் ஏதாவது புதிதாக கண்டுபிடிக்க வேண்டிய நிலமை. இப்படி ஆயின், முன்னோர் கண்டுபிடித்தவற்றை கற்றறியவே கல்விக் காலம் முழுவதும் முடுந்து விடும். பிறகு மாணவர்கள் கண்டுபிடிக்கும் நேரம் அவர்கள் வாழ்வில் இறுதிக் காலமாகத் தான் இருக்கும். மாணவர்களுக்கு ஆர்வம் இருந்தாலும், உயிர் நிலைக்க மாட்டா.