அரசியல்
-
வளர்ச்சி அடைந்த நாட்டிற்கே சனநாயகம் சிறந்தது
சனநாயகம் மட்டும் தான் நல்ல வழி என்றில்லை. சனநாயகம் என்ன சொல்கிறது? பெரும்பான்மை மக்களின் விருப்பிற்கு செல்வது சரி என்கிறது. அப்படியாயின் சிறுபான்மை மக்களின் பேச்சு எடுபடுவதில்லை தானே. உலக நாடுகள் சனநாயகம் என்று சொல்பவர்கள் உண்மையில் அதைத் தான் செய்கிறார்களா? பாலஸ்தீன காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பு சுதந்திர வாக்கெடுப்பில் பெரும்பான்மை பெற்று வந்தது. உடனே “சனநாயக” நாடுகள் என்ன சொன்னன? உதவிகள் அனைத்தையும் ரத்து செய்கிறோம். பொருளாராதாரத் தடை அந்தத் தடை இந்தத் தடை எல்லாம் போட்டன. அப்போ உண்மையில் இவர்கள் விருப்பம் சனநாயகம் தானா? இதே சந்தர்ப்பத்தை அமெரிக்காவில் பாருங்கள். புஷ் போரை ஆரம்பித்த பின் நடைபெற்ற வாக்கெடுப்பில் புஷ் இக்குத் தான் பெரும்பான்மை. அவர் தன் போர் சரி என்று மேலும் தொடர்ந்தார். அப்போது இந்த “சனநாயத்தை” விரும்பும் நாடுகள் ஹமாஸ் இற்கு நடந்துகொண்டது போல் நடந்தனவா? இதற்காக சனநாயகத்தைக் குறை கூறவில்லை. ஆனால், உலகிலேயே சனநாயகத்தை அறிமுகப்படுத்தி பிரபலப்படுத்திய நாடுகள் கூட தங்கள் நலனுக்காக சனநாயகத்தை ஓரந்தள்ளக் கூட…
-
சனாதிபதி/ பாராளுமன்றத் தேர்தல்
சனாதிபதிப் பதவியோ வேறு எந்த தேர்தலில் போட்டியிட்டு வரும் பதவியோ இத்தனை தடவைக்கு மேல் போட்டியிட முடியாது என்று இருத்தல் கூடாது. அமெரிக்க சனாதிபதி இரு தடவைக்கு மேல் தெரிவுசெய்யப்பட இயலாது. இப்படியான சட்டங்கள், உண்மையான நல்லவர்களைத் தான் தடுக்கின்றன. கெட்டவர்கள் வேறு குறுக்கு வழி கண்டுபிடித்துவிடுவார்கள். இலங்கையில் முன்பு நடந்தது போல், சனாதிபதித் தேர்தல் நடத்த வேண்டுமா வேண்டாமா என்று ஒரு தேர்தல் கொண்டுவந்தார்கள். இதனால் காலம் இன்னும் நீடிக்கப்பட்டது. அப்படி இல்லையென்றால், இராணுவ ஆட்சி (அ) அவசர கால நிலை என்று ஏதாவது சொல்லி ஆட்சியைத் தக்கவைப்பார்கள். ஆனால், உண்மையிலேயே நாட்டுக்கு நல்லது செய்தவர்கள் சட்டத்திற்கு கட்டுப்படு விலகி நாட்டுக்கு நட்டமாகிப்போய்விடும். மகாத்மா காந்தி சொன்னது போல் 1000 குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது. ஒன்றை யோசித்தீர்களா? ஏன் சனநாயகத்தில் அரசியல் கட்சிகள் அவசியம் என்று? உங்கள் வட்டாரத்தில் ஒருவருக்கு வாக்குப் போட ஆசை, ஆனால், அவரின் கட்சி குளறுபடி. அதே போல், இந்தக் கட்சிக்கு வாக்குப் போட…