வடிவமைப்பு

  • வடிவமைப்பு,  வீதி விதிமுறை

    வீதி வடிவமைப்பு

    கனடாவில் வீதி வடிவமைப்புக்கள் மிகவும் திறமையாக அமைக்கப்பட்டுள்ளன. இருந்தாலும், அதிக வாகனங்களின் காரணமாக, வீதி நெரிசல்கள் ஏற்படுவதுண்டு. இங்கே நான் கண்ட வாகன நெரிசல்களைத் தவிர்க்கும் வழிகளைக் கவனத்தில் கொண்டு எழுதுகிறேன். இங்கே கடுங்குளிரின் காரணமாக, வாகனம் ஒன்றாவது ஒரு குடும்பம் வைத்திருக்க வேண்டிய நிலை நிலவுகிறது. ஆனால், இங்கே போன்று தமிழீழத்திலும் வீதிகளை வடிவமைத்தால் போக்குவரத்து மிகவும் சீராக அமையும். எந்த வீதியிலும் இரு வாகனங்கள் ஒரே நேரத்தில் போகக்கூடிய வாறு அமைப்பது என்பது மிக மிக அவசியம். இது ஒரு வாகனம் மிகவும் மெதுவாக பயணிக்குமாயின், அடுத்து வரும் வாகனங்களும் தடைப்பட்டு ஒரு மிக நீண்ட வாகன நெரிசலை உண்டுபண்ணாமல் தடுக்க உதவும். இடம் இருக்கும் பட்சத்தில், ஒவ்வொரு சந்தியிலும், வலது புற மற்றும் இடது புற திரும்பும் வாகனக்களுக்கு என்று தனியாக [புதிதாக] அமைக்க வேண்டும். ஏற்கனவே ஒரு திசையில் செல்லும் வீதியில் இருக்கும் இரண்டு வழிகளை விட இவ் வழிகள் அமைப்பது இப்படி வலது (அ) இடது புறம் திரும்பும்…

  • வடிவமைப்பு

    திகதி வடிவமைப்பு

    திகதிகளை பல வடிவமைப்புக்களில் வெவ்வேறு நாடுகளில்/ வெவ்வேறு மொழிகளுக்கேற்ப எழுதுகிறார்கள்.  நீண்ட முறை [long format] என்றும் குறுகிய முறை [short format] என்றும் சாதாரணமாக கையாழ்கிறார்கள். 17 ஜூலை 2007   – long format 17-07-2007   – short format எந்த முறையில் கணியில் காட்டப்பட்டாலும் இயல்நிலை [default] ஆக அமெரிக்க முறையில் தான் சகல விதத்திலும் இருக்கும் வண்ணம் வடிவமைத்திருக்கிறார்கள்.  சேமிக்கும்போது , தானாக காண்பிக்கும்போது என்று அமெரிக்க முறையிலேயே காண்பிக்கப்படும்.  வேறு விதமாக வேண்டுமானால், அந்த திகதி வடிவமைப்பு முறையை மாற்றவேண்டும். மென்பொருள் எழுதுபவர்களுக்கு இது எப்போதும் ஒரு சவாலாகவே இருந்து வருகிறது.  இப்போது பல இலகுவாக்க வழிகள் வந்துவிட்டாலும், “09/11/2001” என்று உபயோகித்தால் அது செப்டம்பர் மாதம் 11ம் திகதி என்றே கணக்கிலெடுக்கும்.  ஆனால் உங்களுக்கு நொவெம்பர் மாதம் 9ம் திகதி வெண்டுமென்றால், மென்பொருள் எழுதுபவர் அதற்கேற்ப மாற்ற வேண்டியிருக்கும். DD = திகதி MM = மாதம் YYYY = வருடம் கனடா [ஆங்கிலம்]/ பிரித்தானிய முறை DD/MM/YYYY…

© 2025 - All Right Reserved. | Adadaa logo