கனடாவில் வீதி வடிவமைப்புக்கள் மிகவும் திறமையாக அமைக்கப்பட்டுள்ளன. இருந்தாலும், அதிக வாகனங்களின் காரணமாக, வீதி நெரிசல்கள் ஏற்படுவதுண்டு. இங்கே நான் கண்ட வாகன நெரிசல்களைத் தவிர்க்கும் வழிகளைக் கவனத்தில் கொண்டு எழுதுகிறேன்.
இங்கே கடுங்குளிரின் காரணமாக, வாகனம் ஒன்றாவது ஒரு குடும்பம் வைத்திருக்க வேண்டிய நிலை நிலவுகிறது.
ஆனால், இங்கே போன்று தமிழீழத்திலும் வீதிகளை வடிவமைத்தால் போக்குவரத்து மிகவும் சீராக அமையும்.
எந்த வீதியிலும் இரு வாகனங்கள் ஒரே நேரத்தில் போகக்கூடிய வாறு அமைப்பது என்பது மிக மிக அவசியம். இது ஒரு வாகனம் மிகவும் மெதுவாக பயணிக்குமாயின், அடுத்து வரும் வாகனங்களும் தடைப்பட்டு ஒரு மிக நீண்ட வாகன நெரிசலை உண்டுபண்ணாமல் தடுக்க உதவும்.
இடம் இருக்கும் பட்சத்தில், ஒவ்வொரு சந்தியிலும், வலது புற மற்றும் இடது புற திரும்பும் வாகனக்களுக்கு என்று தனியாக [புதிதாக] அமைக்க வேண்டும். ஏற்கனவே ஒரு திசையில் செல்லும் வீதியில் இருக்கும் இரண்டு வழிகளை விட இவ் வழிகள் அமைப்பது இப்படி வலது (அ) இடது புறம் திரும்பும் வாகனங்களால், பின்னுக்கு வரும் வாகனங்கள் காக்க நேரிடாமல் செய்யும். இப்படி புதிதாக உருவாக்கும் வழியில் ஒரு வாகனமேனும் மற்றய பின்னுக்கு வரும் வாகனங்களைத் தடுக்காமல் ஓரமாக நிற்க இயலுமாயின், அதுவே பெரிய வாகன் நெரிசலைத் தவிர்க்கக் கூடியது.
அப்படி வலது மற்றும் இடது புறம் திரும்பும் வாகனங்களுக்கு என்று தனியாக வழி அமைக்க இடம் போதாக் குறையாயின், வலது புறமாகத் திரும்பும் வாகனங்களுக்காவது புதிய வழி அமைத்தல் நன்று. தமிழீழத்தில் இடது புற ஓட்டுதல் முறை இருப்பதால், வலது புறம் திரும்புவதே கடினமான (அ) நேரம் எடுக்கும் செயலாகும். ஆகவே, வலது புறத்திற்குத் திரும்பும் வாகனங்களுக்கு மட்டுமாவது, சந்தியில், புதிய வழி அமைத்தால் வாகன நெரிசலைக் குறைக்கலாம்.