அரசாங்க உத்தியோகத்தில் உள்ளவர்கள் அதே தொழிலை தனிப்பட்ட முறையிலும் செய்யத் தடை விதிக்க வேண்டும்.
அரசாங்க சம்பளத்தையும் வாங்கிக் கொண்டு அதே தொழிலை ஒருவர் தனியாராக செய்தால் அவர் அரசாங்க தொழிலில் வரும் வாடிக்கையாளர்களை தனது சொந்த தொழிலுக்கு மாற்ற முயல்வார் (அ) தனது சொந்த தொழிலை அதி கூடிய கவனத்துடன் செய்வார். இதனால், அரசாங்கத்தின் தரம் குறையும்; அரசாங்கத்தின் மேலுள்ள மக்களின் நம்பிக்கை அற்றுப்போகும்.
கொழும்பில் தமிழ்ப் பாடசாலையில் பயிலும்போது எங்கள் கணித பாட ஆசிரியர் வகுப்பில் ஒரே நித்திரை கொள்வார். சரியாகப் படிப்பிப்பதும் கிடையாது. வகுப்பில் ஒருவருக்குமே அவரைப் பிடிக்கவில்லை. ஆனால், அவர் மாலை நேரத்தில் சொந்த tuition வைத்து சொல்லிக்கொடுத்துக்கொண்டு வந்தார். அங்கே அவர் மிகவும் கவனத்துடன் பாடம் நடத்தினார். அரசாங்க பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களும், அட அதே பாடசாலை ஆசிரியர் ஆச்சே என்று அவரிடமே தமது பிள்ளைகளை tuition இற்கு விடுவார்கள். ஒரு மாணவரிடம் ரூ.100/ மாதம் அறவிட்டார். ஆனால், அவர் ஒளுங்காக பாடசாலையில் பாடம் படிப்பித்திருந்தால் tuition இற்குப் போகவேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது. அவரும் தனது tuition இற்கு மாணவர்களை வரவழைக்க அப்படி நடந்துகொண்டார்.
அதற்காக எல்லா ஆசிரியர்களும் அப்படி என்று சொல்ல முடியாது என்று வாதிடலாம். இவரைப் போல் ஒரு விஞ்ஞான ஆசிரியர் பாடசாலையிலும் நன்றாகப் படிப்பித்தார், தனது சொந்த tuition இலும் அதை விட நன்றாகப் படிப்பித்தார்.
இவை வெறும் ஆசிரியருக்கு மட்டுமல்லாமல் சகல உத்தியோகத்தர்களுக்கும் பொருந்தும். ஒரு building foreman/ engineer அரச வேலையை ஒழுங்காக செய்யாமல் (அ) தாமதப்படுத்தி தனது அதே சொந்தத் தொழிலைச் செய்யலாம். இதே போல் ஒரு வைத்தியரும் நடந்து கொள்ளலாம்.
ஆகவே, அரச உத்தியோகத்தில் உள்ளவர்கள் தனியாராக அதே தொழிலைச் செய்ய அனுமதிக்கக் கூடாது. இது அரசாங்கத்தின் தரம் கெட்டுப் போக வழி வகுக்கும்.
அரசாங்க உத்தியோகத்தர் தனியாராகவூம் அதே தொழிலை செய்பவர் எனக் கண்டுபிடிக்கப்பட்டால் அவர் அந்த தனியார் தொழிலை விட்டு விலக ஒரு முறை குறைந்த பட்ச தண்டனை கொடுக்கலாம். அவர் அப்படி விலக மறுத்தால் (அ) மீண்டும் ஒருமுறை செய்தால் ஆகக் கூடிய தண்டனையாக, அந்த நபருக்கு இனிமேல் எந்த அரசாங்க வேலையும் கொடுக்கக் கூடாது என்று தண்டனை கொடுக்க வேண்டும்.
மேலே குறிப்பிடப்பட்ட விடயங்களனைதும் உண்மை எருமைகு நுளப்புகத்தாலென்ன நோகவாபோகின்றது. ++கா.சிவா.பிறாண்ஸ்++