Posted on

திகதிகளை பல வடிவமைப்புக்களில் வெவ்வேறு நாடுகளில்/ வெவ்வேறு மொழிகளுக்கேற்ப எழுதுகிறார்கள்.  நீண்ட முறை [long format] என்றும் குறுகிய முறை [short format] என்றும் சாதாரணமாக கையாழ்கிறார்கள்.

17 ஜூலை 2007   – long format

17-07-2007   – short format

எந்த முறையில் கணியில் காட்டப்பட்டாலும் இயல்நிலை [default] ஆக அமெரிக்க முறையில் தான் சகல விதத்திலும் இருக்கும் வண்ணம் வடிவமைத்திருக்கிறார்கள்.  சேமிக்கும்போது , தானாக காண்பிக்கும்போது என்று அமெரிக்க முறையிலேயே காண்பிக்கப்படும்.  வேறு விதமாக வேண்டுமானால், அந்த திகதி வடிவமைப்பு முறையை மாற்றவேண்டும்.

மென்பொருள் எழுதுபவர்களுக்கு இது எப்போதும் ஒரு சவாலாகவே இருந்து வருகிறது.  இப்போது பல இலகுவாக்க வழிகள் வந்துவிட்டாலும், “09/11/2001” என்று உபயோகித்தால் அது செப்டம்பர் மாதம் 11ம் திகதி என்றே கணக்கிலெடுக்கும்.  ஆனால் உங்களுக்கு நொவெம்பர் மாதம் 9ம் திகதி வெண்டுமென்றால், மென்பொருள் எழுதுபவர் அதற்கேற்ப மாற்ற வேண்டியிருக்கும்.

DD = திகதி
MM = மாதம்
YYYY = வருடம்

கனடா [ஆங்கிலம்]/ பிரித்தானிய முறை
DD/MM/YYYY

பிரஞ்சு முறை
YYYY-MM-DD

அமெரிக்க முறை
MM/DD/YYYY

இதில் மாதமும் திகதியும் எப்போதும் குழம்புப்பட்டுக்கொண்டிருக்கும்; திகதி 13 ஐ விடக் குறைவென்றால்.

கணினிமயமான உலகில் பல மென்பொருள்கள் அமெரிக்க திகதி வடிவமைப்பிலேயே இயங்குகிறது.  கனடாவில் திகதி வடிவமைப்பு முறை வேறு என்றாலுங்கூட பல நிறுவனங்களில் ஊழியர்கள் அமெரிக்க திகதி வடிவமைப்பு முறையிலேயே பாவிக்க வேண்டி இருக்கிறது; ஏனெனில், அமெரிக்க மென்பொருளை  உபயோகிப்பதால்.  கனேடிய முறை வேண்டும் என்பதற்காக மட்டுமே புதிய ஒரு மென்பொருள் பல இலட்ச செலவில் எழுத முடியாது தானே.

கணியில் இடும்போது “09/11/2001” என்று இடாமல், “2001/11/09” என்று இட்டால் அது உங்களுக்குத் தேவையான நொவெம்பர் 9ம் திகதி எனக் கணக்கிலெடுக்கும்.

இதே வடிவமைப்பை தாளில் [பேப்பரில்] எழுதும்போதும்  பயன்படுத்தலாம்.  இந்த முறையில் ஒரு வசதியும் இருக்கிறது.  எத்தனை பேர் திகதி எழுத எத்தணித்து விட்டு, அட இன்றைக்கு எத்தனையாம் திகதி என்று யோசித்துக்கொண்டிருப்பீர்கள்.  இது திகதி-மாதம்-வருடம் என்று எழுத எத்தணிப்பதால், முதலில் திகதி தெரியவில்லையென்றால் எழுதத் தொடங்காமலே யோசிப்பீர்கள்.  அப்படி இல்லாமல் வருடம்-மாதம்-திகதி, என்றால் உடனே முதல் இரண்டையாவது எழுதிவிடுவீர்கள்.  முதல் இரண்டை எழுதும் நேரத்தில் திகதியைக் கண்டுபிடித்துவிடுவீர்கள்.

ஆகவே, தமிழீழத்தில் “வருடம்-மாதம்-திகதி” என்ற குறுகிய முறையைக் கையாள்வது நலம் என்று நினைக்கிறேன்.   நீண்ட வடிவமைப்பு எவ்வாறாயினும் இருக்கலாம்.

One Reply to “திகதி வடிவமைப்பு”

  1. சாத‌க‌க் குறிப்புக்க‌ள் எழுதும் சோதிட‌ர்க‌ள் அன்றைய‌ ந‌டைமுறையில் இருந்த‌ த‌மிழாண்டு திக‌தி களைவைத்தே வீடுக‌ட்டுதல்,திரும‌ண‌ம்,போண்ற‌வ‌ற்றை க‌ணிக்கின்ற‌ன‌ர் த‌மிழ்திக‌திக‌ள்(ஆண்டு) முத‌ல், சிங்க‌ள‌திக‌தி,ஆண்டிலிருந்து,ஸ்லாமிய‌ர் ஆண்டூ, ஆங்கிலேய‌ர் ஆண்டூ, என்று ப‌ல‌உண்டு இவ‌ற்றைந‌டைமுறைப்ப‌டுதாது ஆங்கிலேய‌ ஆண்டையும், ஆங்கிலேய,,போத்துக்கீச‌ ம‌த‌த்தையும் க‌லாச‌ர‌த்தையும் ப‌த‌விக‌ளுக்காக‌ மாற்றிக்கொண்டு சொந்த நாட்டு ம‌த‌த்தையும் க‌லாசார‌த்தையும் புற‌க்க‌ணிக்கும் எங்க‌ளுக்கு அவ்வாழ்க்கை ஒருகோடா? அல்ல‌து எம்நாட்டு க‌லாசாமும் இய‌ற்கை ம‌த‌ங்க‌ளும் ம‌திப்ப‌தாக‌ நினைத்து மிதிப்ப‌து தான் நீதியா?!!! யாரும‌றிந்தால் இவ‌ற்றிக்கான‌ உண்மையான‌ நியாய‌த்தையும் உண்மைக்க‌ருத்தையும் கூற‌த்த‌யங்கார் அவ‌ர்க‌ளே உண்மைத‌மிழ‌ர் த‌மிழ‌ர்க‌ளென்று கூற‌ த‌குதிஉடையோர் அப்ப‌டி யாருமிருந்தால் இப்ப‌டி எழுதாரா? சி ந்தித்து நின்று க‌வ‌னித்து த‌மிழ‌ர்தான் நாம் என்ப‌தை உறுதிகொண்டு அன்புட‌னே எழுதிடுவீ அன்புத் த‌மிழ்ச‌கோத‌ரா. “” நான் என்னை அறிந்தால் நீஉன்னை அறிந்தால் உல‌க‌த்தில் த‌லை நிமிர்ந்துவாழ‌லாம் “””+++ கா.சிவா (பிறாண்ஸ்)+++

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image