எந்தெந்த தொழில்கள் மனித அடிப்படை அத்தியாவசியத்திற்கு தேவையோ அவை தமிழீழ அரசாங்கத்தால் நடத்தப்பட வேண்டும் [நீர், மின்சாரம், தபால் சேவை, உள்ளூர் பேரூந்து சேவை, புகையிரத சேவை]. அது ஒரு நியாயமான விலையை அப் பொருள்களுக்கு/ சேவைக்கு வழங்கும். இலாபத்திற்கு என்று விலைகள் அளவுக்கதிகமாக உயராமல் இருக்க உதவும்.
எந்தெந்த தொழில்கள் சமூக நலனை பாதிக்குமோ அவை அரசாங்கத்தால் நடத்தப்பட வேண்டும் [மதுபானம், சூதாட்டம், அதிட்ட லாபச் சீட்டு] அது ஒரு ஒழுங்கு முறையை கடைப்பிடிக்க உதவும். நேரங்கடந்த விற்பனையோ/ தரம் கெட்ட விற்பனையோ நடக்காமல் இருக்க உதவும்.