• தொழில்,  வேலை

    அரசாங்க உத்தியோகத்தரும் தனியார் தொழிலும்

    அரசாங்க உத்தியோகத்தில் உள்ளவர்கள் அதே தொழிலை தனிப்பட்ட முறையிலும் செய்யத் தடை விதிக்க வேண்டும். அரசாங்க சம்பளத்தையும் வாங்கிக் கொண்டு அதே தொழிலை ஒருவர் தனியாராக செய்தால் அவர் அரசாங்க தொழிலில் வரும் வாடிக்கையாளர்களை தனது சொந்த தொழிலுக்கு மாற்ற முயல்வார் (அ) தனது சொந்த தொழிலை அதி கூடிய கவனத்துடன் செய்வார்.  இதனால், அரசாங்கத்தின் தரம் குறையும்; அரசாங்கத்தின் மேலுள்ள மக்களின் நம்பிக்கை அற்றுப்போகும். கொழும்பில் தமிழ்ப் பாடசாலையில் பயிலும்போது எங்கள் கணித பாட ஆசிரியர் வகுப்பில் ஒரே நித்திரை கொள்வார்.  சரியாகப் படிப்பிப்பதும் கிடையாது.  வகுப்பில் ஒருவருக்குமே அவரைப் பிடிக்கவில்லை.   ஆனால், அவர் மாலை நேரத்தில் சொந்த tuition வைத்து சொல்லிக்கொடுத்துக்கொண்டு வந்தார்.  அங்கே அவர் மிகவும் கவனத்துடன் பாடம் நடத்தினார்.  அரசாங்க பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களும், அட அதே பாடசாலை ஆசிரியர் ஆச்சே என்று அவரிடமே தமது பிள்ளைகளை tuition  இற்கு விடுவார்கள்.  ஒரு மாணவரிடம் ரூ.100/ மாதம் அறவிட்டார்.  ஆனால், அவர் ஒளுங்காக பாடசாலையில் பாடம் படிப்பித்திருந்தால் tuition  இற்குப்…

  • அரசியல்

    வளர்ச்சி அடைந்த நாட்டிற்கே சனநாயகம் சிறந்தது

    சனநாயகம் மட்டும் தான் நல்ல வழி என்றில்லை. சனநாயகம் என்ன சொல்கிறது? பெரும்பான்மை மக்களின் விருப்பிற்கு செல்வது சரி என்கிறது. அப்படியாயின் சிறுபான்மை மக்களின் பேச்சு எடுபடுவதில்லை தானே. உலக நாடுகள் சனநாயகம் என்று சொல்பவர்கள் உண்மையில் அதைத் தான் செய்கிறார்களா? பாலஸ்தீன காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பு சுதந்திர வாக்கெடுப்பில் பெரும்பான்மை பெற்று வந்தது. உடனே “சனநாயக” நாடுகள் என்ன சொன்னன? உதவிகள் அனைத்தையும் ரத்து செய்கிறோம். பொருளாராதாரத் தடை அந்தத் தடை இந்தத் தடை எல்லாம் போட்டன. அப்போ உண்மையில் இவர்கள் விருப்பம் சனநாயகம் தானா? இதே சந்தர்ப்பத்தை அமெரிக்காவில் பாருங்கள். புஷ் போரை ஆரம்பித்த பின் நடைபெற்ற வாக்கெடுப்பில் புஷ் இக்குத் தான் பெரும்பான்மை. அவர் தன் போர் சரி என்று மேலும் தொடர்ந்தார். அப்போது இந்த “சனநாயத்தை” விரும்பும் நாடுகள் ஹமாஸ் இற்கு நடந்துகொண்டது போல் நடந்தனவா? இதற்காக சனநாயகத்தைக் குறை கூறவில்லை. ஆனால், உலகிலேயே சனநாயகத்தை அறிமுகப்படுத்தி பிரபலப்படுத்திய நாடுகள் கூட தங்கள் நலனுக்காக சனநாயகத்தை ஓரந்தள்ளக் கூட…

© 2025 - All Right Reserved. | Adadaa logo