சனாதிபதிப் பதவியோ வேறு எந்த தேர்தலில் போட்டியிட்டு வரும் பதவியோ இத்தனை தடவைக்கு மேல் போட்டியிட முடியாது என்று இருத்தல் கூடாது. அமெரிக்க சனாதிபதி இரு தடவைக்கு மேல் தெரிவுசெய்யப்பட இயலாது. இப்படியான சட்டங்கள், உண்மையான நல்லவர்களைத் தான் தடுக்கின்றன. கெட்டவர்கள் வேறு குறுக்கு வழி கண்டுபிடித்துவிடுவார்கள். இலங்கையில் முன்பு நடந்தது போல், சனாதிபதித் தேர்தல் நடத்த வேண்டுமா வேண்டாமா என்று ஒரு தேர்தல் கொண்டுவந்தார்கள். இதனால் காலம் இன்னும் நீடிக்கப்பட்டது. அப்படி இல்லையென்றால், இராணுவ ஆட்சி (அ) அவசர கால நிலை என்று ஏதாவது சொல்லி ஆட்சியைத் தக்கவைப்பார்கள்.
ஆனால், உண்மையிலேயே நாட்டுக்கு நல்லது செய்தவர்கள் சட்டத்திற்கு கட்டுப்படு விலகி நாட்டுக்கு நட்டமாகிப்போய்விடும்.
மகாத்மா காந்தி சொன்னது போல் 1000 குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது.
ஒன்றை யோசித்தீர்களா? ஏன் சனநாயகத்தில் அரசியல் கட்சிகள் அவசியம் என்று? உங்கள் வட்டாரத்தில் ஒருவருக்கு வாக்குப் போட ஆசை, ஆனால், அவரின் கட்சி குளறுபடி. அதே போல், இந்தக் கட்சிக்கு வாக்குப் போட ஆசை, ஆனால், எனது வட்டாரத்தில் கேட்பவருக்கு எனக்கு வாக்குப் போட விருப்பம் இல்லை.
ஒரே கட்சியில் இருந்தால் கூட ஏதோ ஒரூ தாதா கூட்டம்போல், எல்லோரும் ஒரு பக்கம் சாய்கிறார்களே. பாராளுமன்றத்தில், வோட்டு நடக்கும்போது, ஒட்டு மொத்த கட்சி அங்கத்தவர்களும் ஒரு பக்கம் சாய்கிறார்கள். அவ்வளவு ஒற்றுமையான கருத்தைய்யா அவ்வளவு பேரும் கொண்டிருக்கிறார்கள்? இல்லை, கட்சி என்று வந்துவிட்டோம் இனி எதையும் ஒரு கருத்தாகத் தான் எடுக்கவேண்டும் என்று எடுக்கிறார்கள். அதில் சிலருக்கு விரூப்பம் இல்லாவிடில் கூட கட்சியின் “நலன்” கருதி மற்றப் பக்கம் சாய்கிறார்கள். எதிர்க்கட்சீக்காரர்கள் எப்போது ஆளுங்கட்சி எதைக்கொண்டு வந்தாலும் அதை எதிர்த்து நிறுத்துகிறார்கள்.
வெள்ளைக்காரன் சொன்னதை செய்கிறோம். ஏன் நாங்களாகவே, சனநாயகமாக இருக்கட்டும், கட்சி என்ற ஒன்றே வேண்டாம் என்று யோசித்தோமா? கட்சி என்று ஒன்றில்லாமல், ஒவ்வொருவரும் தனித் தனி. இப்போ எனக்கு விருப்பமானவருக்கு நான் போடுவேன். பாராளுமன்றத்தில் வோட்டு நடக்கும்போது, அவர்கள் “கட்சி” என்ற கட்டுகோப்பு இல்லாமல், தாங்களாகவே முடிவெடுப்பார்கள். இப்போது கட்சி “நலன்” கருதாமல், தங்களுக்கு வாக்குப் போட்ட மக்கள் நலன் கருதுவார்கள் தானே?
இது மாலைதீவில் நடக்கிறது.
வாக்கு என்பது வேறில்லை
வாக்களித்த உன்னறிவை
உணர்வீர் என்றால்
பகுத்தறிவு தானாய்
வந்திடு மோசொல் நண்பா.
=======+கா.சிவா.பிறாண்ஸ்+====