-
திகதி வடிவமைப்பு
திகதிகளை பல வடிவமைப்புக்களில் வெவ்வேறு நாடுகளில்/ வெவ்வேறு மொழிகளுக்கேற்ப எழுதுகிறார்கள். நீண்ட முறை [long format] என்றும் குறுகிய முறை [short format] என்றும் சாதாரணமாக கையாழ்கிறார்கள். 17 ஜூலை 2007 – long format 17-07-2007 – short format எந்த முறையில் கணியில் காட்டப்பட்டாலும் இயல்நிலை [default] ஆக அமெரிக்க முறையில் தான் சகல விதத்திலும் இருக்கும் வண்ணம் வடிவமைத்திருக்கிறார்கள். சேமிக்கும்போது , தானாக காண்பிக்கும்போது என்று அமெரிக்க முறையிலேயே காண்பிக்கப்படும். வேறு விதமாக வேண்டுமானால், அந்த திகதி வடிவமைப்பு முறையை மாற்றவேண்டும். மென்பொருள் எழுதுபவர்களுக்கு இது எப்போதும் ஒரு சவாலாகவே இருந்து வருகிறது. இப்போது பல இலகுவாக்க வழிகள் வந்துவிட்டாலும், “09/11/2001” என்று உபயோகித்தால் அது செப்டம்பர் மாதம் 11ம் திகதி என்றே கணக்கிலெடுக்கும். ஆனால் உங்களுக்கு நொவெம்பர் மாதம் 9ம் திகதி வெண்டுமென்றால், மென்பொருள் எழுதுபவர் அதற்கேற்ப மாற்ற வேண்டியிருக்கும். DD = திகதி MM = மாதம் YYYY = வருடம் கனடா [ஆங்கிலம்]/ பிரித்தானிய முறை DD/MM/YYYY…
-
தமிழில் ஊர்ப் பெயர்
நம் நாடுகளில் இன்னும் பல ஊர்களுக்கு தமிழில் ஒரு பெயர், ஆங்கிலத்தில் ஒரு பெயர் என்று தானே இருக்கிறது? அவனுக்கு வாயில் நுழைவதற்காக நாம் இன்னும் மாற்றாமல் இருக்கிறோம். அதே ஊர்க்காரன் ஒருவனிடம் முகவரி கேட்டு வருபவர் ஆங்கில பெயரைக் கேட்டால் ஊர்க்காரன் முழிப்பான். ஊர்க்காரனுக்கு ஆங்கிலம் தெரியாது என்று மற்றவர்கள் பழிப்பார்கள். ஏன்? யேர்மனியில், பிரான்சில், சப்பானில் என்ன தங்கள் ஊர்களின் பெயரை இப்படி இரு வேறாக பிரித்து வைத்திருக்கிறார்களா என்ன? நாம் இன்னும் அடிமைகளாக வாழ்ந்து அடிமைகளாக சிந்திக்கிறோம். பருத்தித்துரை = Point Pedro மட்டக்களப்பு = Batticaloa யாழ்ப்பாணம் = Jaffna இப்படி பல ஊர்ப் பெயர்கள் தமிழில் ஒன்றாகவும் ஆங்கிலத்தில் ஒன்றாகவும் இருக்கிறது. கனடாவில் கியூபெக் என்னும் பிரஞ்சு மக்கள் அதிகமாக குடியிருக்கும் மாகாணத்தில் உள்ள சில ஊர்ப் பெயர்கள்: Notre-Dame-De-Lorette Dollard-Des-Ormeaux Côte-St-Luc L’Ascension-De-Notre-Seigneur Pierrefonds Montréal நாங்கள் சுதந்திரம் பெற்றுவிட்டோம் என்று மார்தட்டிக் கொண்டாலும் இன்னும் அடிமைக் குணம் போகவில்லையே. தமிழீழத்தில் ஊர்ப் பெயர்கள் அந்த ஊரின்…