எந்த மத சமய ஆலயங்களும் ஒரு நிறுவனம் போல் கருதப்பட வேண்டும்.
அதாவது சமய கோவில்கள் ஒரு இலாப நோக்கற்ற தாபனமாகக் கருதி வரி விலக்கீடு கொடுக்கக் கூடது. பல சமய தாபனங்கள் இந்த வரி விலக்கீடு முறையால் பலமடங்கு இலாபம் அடைந்தாலும், நாட்டிற்கு என்று எந்தப் பங்கும் கொடுப்பதில்லை. இந்த வரி விலக்கீடு காரணமாகவே பலர் சமய ஆலயங்களை நிறுவுகிறார்கள்.
சைவ, கிறிஸ்தவ, முஸ்லிம் என்று எந்த மத கோவிலாக இருந்தாலும் அதை ஒரு நிறுவனமாகக் கருதி வரி வசூலிக்கப்பட வேண்டும். எவ்வாறு ஒரு நிறுவனத்திற்கு ஒவ்வொரு கட்ட இலாபத்திற்கும் வரி வசூலிக்கப்படுகிறதோ, அவ்வாறு வரி வசூலிக்கப்பட வேண்டும்.
இலாபம் இல்லாவிடில் என்ன என்ற கேள்வி எழுகிறது. இலாபம் இல்லாவிடினும் ஒரு குறிப்பிட்ட வரி நிறுவனங்கள் செலுத்த வேண்டும். அதே போல் சமய ஆலயங்களும் செலுத்த வேண்டும்.
ஒரு நிறுவனம் ஒரு கோவிலுக்கு 1000 நன்கொடையாக கொடுத்தது என்றால் கோவிலும் அந்த 1000 வருமானமாகக் காட்டவேண்டும். ஏனெனில், அந்த நிறுவனம் இந்தக் கோவிலுக்கு இவ்வளவு நன்கொடையாகக் கொடுத்தது என்று தனது வருமான கணக்கில் காட்டும். கோவில் 1000 வருமானமாக காட்டாவிட்டால் அது சட்டத்திற்கு புறம்பானதாகக் கருதப்படவேண்டும்.
சுருக்கமாகச் சொன்னால், ஒரு நிறுவனத்திற்கும் சமய கோவிலுக்கும் வித்தியாசம் காட்டப்படக் கூடாது வணிக முறையில்.