• தொழில்

    அரசாங்கத்தால் செய்யப்படவேண்டிய தொழில்கள்

    எந்தெந்த தொழில்கள் மனித அடிப்படை அத்தியாவசியத்திற்கு தேவையோ அவை தமிழீழ அரசாங்கத்தால் நடத்தப்பட வேண்டும் [நீர், மின்சாரம், தபால் சேவை, உள்ளூர் பேரூந்து சேவை, புகையிரத சேவை].  அது ஒரு நியாயமான விலையை அப் பொருள்களுக்கு/ சேவைக்கு வழங்கும்.  இலாபத்திற்கு என்று விலைகள் அளவுக்கதிகமாக உயராமல் இருக்க உதவும். எந்தெந்த தொழில்கள் சமூக நலனை பாதிக்குமோ அவை அரசாங்கத்தால் நடத்தப்பட வேண்டும் [மதுபானம், சூதாட்டம், அதிட்ட லாபச் சீட்டு]  அது ஒரு ஒழுங்கு முறையை கடைப்பிடிக்க உதவும்.  நேரங்கடந்த விற்பனையோ/ தரம் கெட்ட விற்பனையோ நடக்காமல் இருக்க உதவும்.

  • சமயம்

    சமய ஆலயங்கள்

    எந்த மத சமய ஆலயங்களும் ஒரு நிறுவனம் போல் கருதப்பட வேண்டும். அதாவது சமய கோவில்கள் ஒரு இலாப நோக்கற்ற தாபனமாகக் கருதி வரி விலக்கீடு கொடுக்கக் கூடது. பல சமய தாபனங்கள் இந்த வரி விலக்கீடு முறையால் பலமடங்கு இலாபம் அடைந்தாலும், நாட்டிற்கு என்று எந்தப் பங்கும் கொடுப்பதில்லை. இந்த வரி விலக்கீடு காரணமாகவே பலர் சமய ஆலயங்களை நிறுவுகிறார்கள். சைவ, கிறிஸ்தவ, முஸ்லிம் என்று எந்த மத கோவிலாக இருந்தாலும் அதை ஒரு நிறுவனமாகக் கருதி வரி வசூலிக்கப்பட வேண்டும். எவ்வாறு ஒரு நிறுவனத்திற்கு ஒவ்வொரு கட்ட இலாபத்திற்கும் வரி வசூலிக்கப்படுகிறதோ, அவ்வாறு வரி வசூலிக்கப்பட வேண்டும். இலாபம் இல்லாவிடில் என்ன என்ற கேள்வி எழுகிறது. இலாபம் இல்லாவிடினும் ஒரு குறிப்பிட்ட வரி நிறுவனங்கள் செலுத்த வேண்டும். அதே போல் சமய ஆலயங்களும் செலுத்த வேண்டும். ஒரு நிறுவனம் ஒரு கோவிலுக்கு 1000 நன்கொடையாக கொடுத்தது என்றால் கோவிலும் அந்த 1000 வருமானமாகக் காட்டவேண்டும். ஏனெனில், அந்த நிறுவனம் இந்தக் கோவிலுக்கு இவ்வளவு…

  • கல்வி

    மேல் வகுப்புக்கு முன்னேற்றம்

    பாடசாலையில், அறிவு கூடிய மாணவர்கள் என்று கணிக்கப்படும் மாணவர்கள் மேல் தர வகுப்புக்கு காலம் கடத்தாமல் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். [fast tracking] நாங்கள் நவீன யுகத்தில் இருக்கிறோம்.  எங்களுக்கு முன் கண்டறிந்த எல்லாவற்றையும் மாணவர்கள் கற்று பின்னரே மாணவர்களால் ஏதாவது புதிதாக கண்டுபிடிக்க வேண்டிய நிலமை.  இப்படி ஆயின், முன்னோர் கண்டுபிடித்தவற்றை கற்றறியவே கல்விக் காலம் முழுவதும் முடுந்து விடும்.  பிறகு மாணவர்கள் கண்டுபிடிக்கும் நேரம் அவர்கள் வாழ்வில் இறுதிக் காலமாகத் தான் இருக்கும்.  மாணவர்களுக்கு ஆர்வம் இருந்தாலும், உயிர் நிலைக்க மாட்டா.

  • வீதி விதிமுறை

    Roundabout vs சமிஞ்சை சந்திப்பு

    Roundabout ===நன்மை=== ஒரு குறிப்பிட்ட நேரம் என்று வாகன போக்குவரத்து நிறுத்தி வைக்கப்படாமை. வாகன போக்குவரத்து தடைபடாமல் தொடர்ச்சியாக நடந்துகொண்டே இருக்கும். தேவையற்ற காத்திருப்பு இருக்காது. சமிஞ்சை சந்திப்பில் போல் அதிகமாக வாகனம் இல்லாத நேரங்களிலும் கூட குறித்த சமிஞ்சை மாறும்மட்டும் காத்திருக்க வேண்டிய நிலையில்லாமை. சமிஞ்சை சந்திப்பில் நடக்கும் விபத்தால் ஏற்படும் தடங்கல் அளவே இங்கும் ஏற்படும். ===தீமை=== சமிஞ்சை சந்திபை கட்ட தேவையான இட வசதியை விட இதைக் கட்டுவதற்கு சற்று கூடிய இடவசதி வேண்டும். Roundabout இற்குள் நுழைய எத்தணிக்கும் வாகனங்களை விட உள்ளே இருக்கும் வாகங்களுக்கு முதலுரிமை கொடுக்கப்படுகிறது. இதனால், ஒரு திசை நோக்கி அதிக வாகனங்கள் வருமானால் மற்றய வாகனங்கள் உள் நுழைய தங்களின் சந்தர்ப்பம் வரும் என்று காத்துக்கொண்டிருப்பது முடிவற்றதாகிவிடக்கூடிய அபாயம் உள்ளது. இந்த சந்தர்ப்பத்தை ஆங்கிலத்தில் “starvation” என்று சொல்வார்கள். தங்களது சந்தர்ப்பம் வரும் என்று காத்திருப்பதே முடிவாகிவிடும். சமிஞ்சை சந்திப்பு ===நன்மை=== சமிஞ்சைகள் இருப்பதால் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட வாகன போக்குவரத்தை உருவாக்கலாம். அதாவது, வெகு…

© 2025 - All Right Reserved. | Adadaa logo