ஊடக மின்னஞ்சல் தளம்
இது அரசியல் ரீதியாகவோ (அ) கருத்துத் தெரிவிக்கப் பயன்படுத்தலாம்.
ஊடகவியலாளர்களின் மின்னஞ்சல் முகவரிகள் அனேகமாக பிரசுரிக்கப்படுவதில்லை. இதிலும் பத்திரிகை ஆசியரின் மின்னஞ்சல்களை எடுப்பது மிகவும் கடினமானதாக இருக்கும்.
பல வாசகர்களுக்கு கருத்து/ பிழையைச் சுட்டிக்காட்ட ஊடகவியலாளர்களுக்கு எழுதத் தோன்றினாலும், அவர்களின் மின்னஞ்சல் முகவரி தெரியாமையால் அப்படியே கைவிட்டுவிட நேரிடலாம்.
இதற்காக ஒரு இணையத்தளம் ஆரம்பிக்கப்பட வேண்டும். சகல ஊடகவியலாளர்களின் மின்னஞ்சல் முகவரிகள் சேகரிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்படல் வேண்டும். ஆனால், எக்காரணம் கொண்டும் ஊடகவியலாளர்களின் மின்னஞ்சல்கள் பிரசுரிக்கப்படக் கூடாது.
அதாவது, ஒரு பயனர், இந்த இணையத்தளத்திற்கு வந்து எந்த ஊடக நிறுவனத்திற்கு, அதில் எந்த ஊடகவியலாளருக்கு [பெயர்] என்று தெரிவு செய்தி நேரடியாக கடிதத்தை எழுதி இணையத்தளத்திலிருந்தே அனுப்பக் கூடியதாக இருக்க வேண்டும்.
இப்படி ஒவ்வொரு நாட்டிற்கு என்று கூட பிரித்து ஆவணப்படுத்தலாம். இந்த சேவையை பலர் உபயோகிக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளன.
அதாவது, அரசியல் ரீதியாக மின்னஞ்சல் எழுத, தமிழர்கள், சோமாலியர்கள், மற்றும் பல அரசியல் குழறுபடிகள் நடைபெறும் பிரதேச மக்கள் இதை உபயோகிப்பார்கள்.
இதைத் தவிர, ஊடகத் துறையில் நாட்டம் கொண்டு கட்டுரைகளை தனியார்களும் [freelance writers]/ மாணவர்களும் அனுப்பலாம்.