• கல்வி

    மேல் வகுப்புக்கு முன்னேற்றம்

    பாடசாலையில், அறிவு கூடிய மாணவர்கள் என்று கணிக்கப்படும் மாணவர்கள் மேல் தர வகுப்புக்கு காலம் கடத்தாமல் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். [fast tracking] நாங்கள் நவீன யுகத்தில் இருக்கிறோம்.  எங்களுக்கு முன் கண்டறிந்த எல்லாவற்றையும் மாணவர்கள் கற்று பின்னரே மாணவர்களால் ஏதாவது புதிதாக கண்டுபிடிக்க வேண்டிய நிலமை.  இப்படி ஆயின், முன்னோர் கண்டுபிடித்தவற்றை கற்றறியவே கல்விக் காலம் முழுவதும் முடுந்து விடும்.  பிறகு மாணவர்கள் கண்டுபிடிக்கும் நேரம் அவர்கள் வாழ்வில் இறுதிக் காலமாகத் தான் இருக்கும்.  மாணவர்களுக்கு ஆர்வம் இருந்தாலும், உயிர் நிலைக்க மாட்டா.

  • வீதி விதிமுறை

    Roundabout vs சமிஞ்சை சந்திப்பு

    Roundabout ===நன்மை=== ஒரு குறிப்பிட்ட நேரம் என்று வாகன போக்குவரத்து நிறுத்தி வைக்கப்படாமை. வாகன போக்குவரத்து தடைபடாமல் தொடர்ச்சியாக நடந்துகொண்டே இருக்கும். தேவையற்ற காத்திருப்பு இருக்காது. சமிஞ்சை சந்திப்பில் போல் அதிகமாக வாகனம் இல்லாத நேரங்களிலும் கூட குறித்த சமிஞ்சை மாறும்மட்டும் காத்திருக்க வேண்டிய நிலையில்லாமை. சமிஞ்சை சந்திப்பில் நடக்கும் விபத்தால் ஏற்படும் தடங்கல் அளவே இங்கும் ஏற்படும். ===தீமை=== சமிஞ்சை சந்திபை கட்ட தேவையான இட வசதியை விட இதைக் கட்டுவதற்கு சற்று கூடிய இடவசதி வேண்டும். Roundabout இற்குள் நுழைய எத்தணிக்கும் வாகனங்களை விட உள்ளே இருக்கும் வாகங்களுக்கு முதலுரிமை கொடுக்கப்படுகிறது. இதனால், ஒரு திசை நோக்கி அதிக வாகனங்கள் வருமானால் மற்றய வாகனங்கள் உள் நுழைய தங்களின் சந்தர்ப்பம் வரும் என்று காத்துக்கொண்டிருப்பது முடிவற்றதாகிவிடக்கூடிய அபாயம் உள்ளது. இந்த சந்தர்ப்பத்தை ஆங்கிலத்தில் “starvation” என்று சொல்வார்கள். தங்களது சந்தர்ப்பம் வரும் என்று காத்திருப்பதே முடிவாகிவிடும். சமிஞ்சை சந்திப்பு ===நன்மை=== சமிஞ்சைகள் இருப்பதால் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட வாகன போக்குவரத்தை உருவாக்கலாம். அதாவது, வெகு…

  • சிறப்பு நாள்

    அன்னையர் தினம்

    அனைவரும் அன்னையர் தினத்தை கொண்டாடுகிறார்கள். அமெரிக்காவில் ஓர் அன்னை தன் பிள்ளைகளுக்காக செய்தவையை நினைவுகூர்ந்து ஆரம்பிக்கப்பட்டதே இந்த அன்னையர் தினம்.தமிழீழத்தில், எங்கள் அன்னையரின் பங்களிப்பை நினைவுகூரும் முகமாக ஒரு நாள் தேர்ந்தெடுத்து கொண்டாடப்பட வேண்டும். மிகவும் அதிகமான போராளிகளைத் தமிழீழத்திற்காக அர்ப்பணித்த ஒரு தாயின் பிறந்த தினத்தைக் கொண்டாடலாம். இறந்த தினம் ஒரு துக்க சம்பவம் என்பதால், பிறந்த தினம் சரியானதாக இருக்கும் என்பது என் எண்ணம்.

© 2025 - All Right Reserved. | Adadaa logo