-
தமிழில் தொழில் பெயர் பதிவு
கனடாவில் நிங்கள் ஒரு நிறுவனத்தை ஆரம்பிப்பதற்கு அந்த நிறுவனப் பெயரைப் பதிவு செய்ய வேண்டும். அந்த பதிவுப் பத்திரம் ஆங்கிலத்தில் (அ) பிரஞ்சு மொழியில் மட்டும் தான் இருக்கும். கனடாவின் ஒரு மாகாணம் கியுபெக். கியூபெக் அரச கரும விண்ணப்பப் படிவங்கள், பிரஞ்சு மொழியிலேயே இருக்கும். ஆங்கில பிரதி தருவார்கள். ஆனால் அதை உபயோகிக்க இயலாது [void என்று எழுதி இருக்கும்]. பரவாயில்லையே என்று யோசிக்கிறீர்களா? அந்த பிரஞ்சு விண்ணப்பப் படிவத்தில் நீங்கள் பிரஞ்சில் தான் நிறப்ப வேண்டும்! இங்கே தமிழ் நிறுவனப் பெயரை பதிவுசெய்ய பல ஆங்கிலப் பெயர்களை பதிவுசெய்யவேண்டிய கட்டாயமாக இருக்கிறது. ஏன்? “காந்திமதி” என்ற பெயருடைய நிறுவனத்தை பதிவு செய்ய ஆங்கிலத்தில் “kanthimathi”, “Ganthimathi”, “Gandhimadhi” இப்படி பல மாறுபட்ட பெயர்களை பதிவு செய்கிறார்கள். ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக பணம் கட்டவேண்டும். ஏனென்றால், வேறு ஒருவர் “காந்திமதி” என்றதை வித்தியாசமான ஆங்கில உச்சரிப்பில் பதிவு செய்யலாம். இதே போல் தமிழீழத்தில் எந்த நிறுவனப் பெயரையும் தமிழில் தான் பதிவு செய்யவேண்டும் என்று சட்டம்…