Saturday, May 26, 2018 03:52:07 AM

நாணயப் பெறுமதியை வீழ்ச்சியடையச் செய்தால் நடவடிக்கை; மத்திய வங்கி ஆளுநர்!

Photo Gallery1 Photo By வன்னியன் - Sat Apr 28, 5:52 pm

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், நாணயப் பெறுமதியை மேலும் வீழ்ச்சியடையச் செய்ய யாராவது முயற்சித்தால்,

அதற்கு எதிராக மத்திய வங்கி நடவடிக்கை எடுக்கும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

டொலர் விற்பனை விலையை தீர்மானிக்கும் விடயத்தில் தலையிடுவதில்லை என கடந்த வருடம் மார்ச் முதல் மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. மிதக்கும் நாணயமாற்று வீதக் கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கைப் பெறுமதி வீழ்ச்சியடைந்திருப்பதற்கு சந்தையில் ஏற்பட்ட மாற்றங்களே காரணமாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

2017ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கையை நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை நிதி அமைச்சரிடம் சமர்ப்பித்த பின்னர் மத்திய வங்கியில் இது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும் போதே கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் நாணயமாற்று இருப்பு 9….

Photo Gallery

Leave a Reply


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You may enter either the first Tamil word or the second English word. But Do not enter both.
Anti-Spam Image

Skip to toolbar