Saturday, February 24, 2018 01:00:07 AM

மாவீரர் துயிலுமில்லங்களில் பிரதான ஈகைச்சுடரினை மாவீரர் ஒருவரின் உறவினரே ஏற்ற வேண்டும்!

Photo Gallery1 Photo By வன்னியன் - Tue Nov 14, 10:00 am

மாவீரர் தினத்தில் துயிலுமில்லங்களில் பிரதான ஈகைச்சுடரினை மாவீரர் ஒருவரின் மனைவியோ, கணவரோ, பெற்றோரோ அல்லது பிள்ளைகளோ ஏற்ற வேண்டும் என்று மாவீரர்கள் குடும்பங்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே மாவீரர் அறவிழியின் தந்தையும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மத்திய குழு உறுப்பினர்களுள் ஒருவருமான முத்துக்குமார் மனோகர் (காக்கா அண்ணா) மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “2009ஆம் ஆண்டுக்கு முன்னர் எவ்வாறான மனோநிலையில் துயிலுமில்லம் சென்றோமோ அவ்வாறே இனியும் செல்லவேண்டும். எந்தச் சூழ்நிலையிலும், எந்த நெருக்கடியிலும் மாவீரர் நாள் நிகழ்வுகளைத் துணிவுடனும், உணர்வுடனும் தொடர்ச்சியாகவும் நினைவுகூர்ந்த யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு பல்கலைக்கழக சமூகங்களின் பங்களிப்பு அளவிட முடியாதது.

தற்போது மாவீரர் நாளையொட்டி சிரமதானப் பணிகளில் உணர்வெழிச்சியுடன் பங்கு பற்றி வரும் அனைவருக்கும் மாவீரரின்களின் பெற்றோரின் சார்பில் பணிவான வணக்கங்கள். இந்த நிகழ்வானது எந்த ஒர் அரசியல் கட்சியினதும் அல்லது அரசியல்வாதியினதும் தேர்தல் தேவைக்கு எவ்விதத்திலும் பயன்படுத்தப்படக்கூடாது என நாம் எதிர்பார்க்கின்றோம்….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.