Wednesday, January 17, 2018 01:05:13 PM

இராணுவத்தினர் மீது எந்தவொரு போர்க்குற்ற விசாரணையையும் நடத்த அனுமதியேன்: ஜனாதிபதி

Photo Gallery1 Photo By வன்னியன் - Fri Nov 10, 4:44 pm

இலங்கையின் ஜனாதிபதியாக தான் பதவியில் இருக்கும் வரை, இராணுவம் உள்ளிட்ட படைவீரர்களை எந்தவொரு போர்க்குற்ற நீதிமன்றத்திலும் நிறுத்துவதற்கு அனுமதிக்க மாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டை காப்பாற்றுவதற்காகவும், தேசிய பேரழிவுகளின் போது உயிரையும் மதிக்காமல் படையினர் ஆற்றிய சேவையை பாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலை அரங்கில் நேற்று வியாழக்கிழமை மாலை இராணுவ கட்டளை அதிகாரிகள், மற்றும் சார்ஜன்ட் மேஜர் தர அதிகாரிகள் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாட்டை காப்பாற்றுவதற்காகவும், தேசிய பேரழிவுகளின் போதும், உங்கள் உயிரையும் மதிக்காமல் நீங்கள் அரப்பணிப்புடன் பணியாற்றியுள்ளீர்கள். அதற்காக நாங்கள் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறோம். அண்மையில் நீங்கள் தேசிய பேரழிவுகள், தொற்றுநோய்கள், நிலச்சரிவுகள் போன்றவை எங்களைத் தாக்கியபோது, முன்னணியில் நின்று பணியாற்றினீர்கள்.

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.