Wednesday, January 17, 2018 01:05:59 PM

2018ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம்; தனிநபர் வருமானத்தை 5 ஆயிரம் டொலர்களாக அதிகரிப்பது இலக்கு!

Photo Gallery1 Photo By வன்னியன் - Fri Nov 10, 4:46 pm

நீல- பசுமையை அடிப்படையாகக் கொண்ட 2018ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தினூடாக தனிநபர் வருமானத்தை 5,000 டொலர்களாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி மற்றும் ஊடக அமைச்சரான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 72வது வரவு- செலவுத் திட்டம் நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் நிதியமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டது.செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றியிருந்தார். அதன்போதே, மேற்கண்ட விடயத்தையும் சுட்டிக்காட்டியிருந்தார்.

நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட மங்கள சமரவீர சமர்ப்பித்த முதலாவது வரவு- செலவுத்திட்டம் இதுவாகும். கடந்தகால வரலாறுகள் மற்றும் பொருளாதார நிலைமைகள் குறித்து அமைச்சர் சுருக்கமாகச் சுட்டிக்காட்டினார். அதேநேரம் தமது அரசாங்கம் கடந்தகாலத்தைப் பற்றி அதிகம் பேசிக்கொண்டிருக்காது, எதிர்காலம் குறித்தே அதிக அக்கறை கொண்டிருப்பதாகக் கூறினார். கடந்தகால மற்றும் நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்த தனது அறிமுக உரையை சுருக்கமாக முடித்துக் கொண்ட அமைச்சர் 3….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.