Monday, November 20, 2017 09:17:45 PM

இலங்கையின் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் அமெரிக்கா தீவிர கவனம்: தோமஸ் செனன்

Photo Gallery1 Photo By வன்னியன் - Tue Nov 07, 10:13 am

இலங்கையின் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பிலும்,

போருக்குப் பின்னரான நல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பிலும் அமெரிக்கா தீவிர கவனம் செலுத்தி வருவதாக அரசியல் விவகாரங்களுக்கான ஐக்கிய அமெரிக்காவின் உதவிச் செயலாளர் தோமஸ் செனன் தெரிவித்துள்ளார்.

“2015இல் ஏற்படுத்தப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம், அனைத்து இன மக்களுக்குமான சுதந்திரத்தை உறுதிபடுத்தியுள்ளதென நினைக்கிறோம். எனினும், போருக்கு பின்னரான அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் அமெரிக்கா ஆலோசனை வழங்கி வருகின்றது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அரசியல் விவகாரங்களுக்கான ஐக்கிய அமெரிக்காவின் உதவிச் செயலாளர் தோமஸ் செனன், வெளிவிவகார அமைச்சில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசும் போதே இதனைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நல்லிணக்கம் பொது பாதுகாப்பு அபிவிருத்தி செயன்முறை தொடர்பில் ஆராய இலங்கை விஜயம் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது….

Photo Gallery

Leave a Reply


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You may enter either the first Tamil word or the second English word. But Do not enter both.
Anti-Spam Image