Monday, November 20, 2017 09:16:54 PM

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்வை மையமாகக் கொண்ட ‘ஒக்கடு மிகிலடு’ திரைப்பட டிரெய்லர்!

Photo Gallery1 Photo By வன்னியன் - Thu Nov 02, 10:28 am

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கையை மையமாக வைத்து தெலுங்கில் எடுக்கப்பட்ட ஒக்காடு மிகிலாடு திரைப்படத்தின் 2ஆவது முன்னோட்டக்காட்சி (டிரெய்லர்) வெளியாகி உள்ளது.

இதன் முதலாவது முன்னோட்டக்காட்சி கடந்த ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதி வெளியிடப்பட்டது.

அந்த வகையில் 2ஆவது முன்னோட்டக்காட்சியை நேற்று படக்குழுவினர் வெளியிட்டள்ளனர்.

அஜய் ஆண்ட்ரூஸ் நுதாக்கியின் இயக்கத்தில் உருவாகிய “ஒக்காடு மிகிலாடு” திரைப்படத்தில் பிரபல நடிகர் மோகன்பாபுவின் மகன் மஞ்சு மனோஜ் நாயகனாக நடித்துள்ளார்.

பிரபாகரனின் வாழ்க்கைச் சித்திரத்தை மையமாக வைத்து உருவாகும் ஒக்காடு மிகிலாடு திரைப்படம் உலகம் முழுவதும் இம்மாதம் 10ஆம் திகதி பிரம்மாண்டமாக வெளியிடப்பட உள்ளதாக படப்பிடிப்புக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

Photo Gallery

Leave a Reply


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You may enter either the first Tamil word or the second English word. But Do not enter both.
Anti-Spam Image