Monday, October 22, 2018 07:47:00 PM

அவசர நிலைக்கு பிறகும் தொடரும் பதற்றம்

Photo Gallery1 Photo By வன்னியன் - Wed Mar 07, 10:47 am

  • Read full article | 
  • Comments Off on அவசர நிலைக்கு பிறகும் தொடரும் பதற்றம்
  • 49 views

இலங்கையில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்ட பின்னரும் கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான சில சம்பவங்கள் நடந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தென்னகும்பர மற்றும் மெனிக்கின்ன ஆகிய பகுதிகளில் முஸ்லிம்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க முயன்றவர்களை போலிஸார் கலைத்திருக்கிறார்கள். துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

அதேவேளை கண்டி மாவட்டத்துக்கு வெளியே பூகொடை என்ற இடத்தில் முஸ்லிம்களின் சில கடைகள் எரிந்ததாக கூறப்படுகின்ற போதிலும் அது விபத்தா அல்லது வன்செயலா என்று இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.

கண்டி மாவட்டத்தில் பள்ளிக்கூடங்கள் தொடர்ந்து மூடிய நிலையிலேயே இருக்கின்றன.

அதேவேளை புதிய அவசர நிலையின் கீழ் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு 20 வருடம் முதல் ஆயுட்சிறை வரை வழங்கப்படலாம் என்று போலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர செய்தி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்….

Photo Gallery

  • Read full article | 
  • Comments Off on அவசர நிலைக்கு பிறகும் தொடரும் பதற்றம்
  • 49 views

Leave a Reply

Comments are closed on this post.

Skip to toolbar