Saturday, February 17, 2018 06:29:56 PM

அரசியல் கைதிகள் விவகாரம் சட்டமா அதிபருக்கு மாத்திரம் பொறுப்பானது அல்ல: சம்பந்தன்

Photo Gallery1 Photo By வன்னியன் - Tue Oct 17, 10:43 am

தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் அரசியல் அடையாளங்களும் காணப்படும் நிலையில்,

அவர்கள் தொடர்பான வழக்குகள், சட்டமா அதிபருக்கு மாத்திரம் பொறுப்பானவையாகக் கருதப்பட முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கவுள்ள சபை ஒத்திவைப்புவேளைப் பிரேரணையிலேயே இதனை வலியுறுத்தவுள்ளார்.

இப்பிரேரரணை சமர்ப்பிக்கப்படுமென, ஏற்கெனவே செய்தி வெளியாகியிருந்த நிலையில், பிரேரணையின் உள்ளடக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதில், “பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள இந்தக் கைதிகள் அனைவரும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழேயே கைது செய்யப்பட்டார்கள் என்பதுடன், அவர்களுக்கு எதிரான சகல நடவடிக்கைகளும் அச்சட்டத்தின் கீழேயே மேற்கொள்ளப்பட்டன. இந்தச் சட்டம் கொடூரமான, வெறுக்கத்தக்க ஒரு சட்டம் என்பதும், அது காலத்துக்குப் பொருத்தமற்றதென்பதும், இலங்கை அரசாங்கத்தால், உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.