Tuesday, November 21, 2017 08:54:11 PM

சாட்சிகளுக்காக வழக்கை இன்னொரு நீதிமன்றத்திற்கு மாற்றுவது கண்டனத்திற்குரியது: முதலமைச்சர் விக்னேஸ்வரன்

Photo Gallery1 Photo By வன்னியன் - Fri Oct 13, 6:19 pm

சட்டப்படி சாட்சிகளுக்காக வழக்கை இன்னொரு நீதிமன்றத்திற்கு மாற்றுவது கண்டனத்திற்குரியது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஒன்றரை இலட்சம் இராணுவத்தினர் வடக்கு மாகாணத்தில் குடிகொண்டிருக்கும் நிலையில் அநுராதபுரத்திலுள்ள மூன்று அரசியல் கைதிகளுக்கு எதிரான அரச தரப்பு சாட்சிகள் அஞ்சுவதாகக் கூறி வழக்குகளை வவுனியா நீதிமன்றத்திலிருந்து, அநுராதபுரத்துக்கு மாற்றுவது நொண்டிச்சாட்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா மேல் நீதிமன்றத்திலுள்ள தமது வழக்குகள் அநுராதபுரத்துக்கு மாற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகள் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் விடுத்திருக்கும் அறிக்கையிலேயே இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, “போர் முடிவடையும் தறுவாயில், முன்னரே கைது செய்து வைத்திருந்த சிலரை விடுதலைப் புலிகள் கொன்றார்கள் என்றும் அதனுடன் இந்த குறிப்பிட்ட கைதிகள் தொடர்புபட்டிருந்தார்கள் என்பதுமே அவர்கள் மீதான குற்றச்சாட்டாகும்….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.