Tuesday, October 17, 2017 03:37:37 AM

‘வலிந்து காணாமல் ஆக்கப்படுதல்’ இலங்கையில் குற்றமாக்கப்பட வேண்டும்: சிவில் அமைப்புக்களின் வடக்கு- கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு!

Photo Gallery1 Photo By வன்னியன் - Thu Oct 12, 6:37 pm

“வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் என்பது வடக்கு, கிழக்கில் எரிகின்ற ஒரு பிரச்சினையாகும்.

தமது உறவுகளைத் திருப்பித்தருமாறு, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், அரசிடம் கோரி நிற்கின்றனர். ஆனால், அரசு மௌனமாக உள்ளது.கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்தியுள்ளது.

பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து அனைத்து நபர்களையும் பாதுகாக்கும் சர்வதேச சமவாயத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டமூலத்தைப் பற்றிய இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் அவதானிப்புகளில், கூறியிருப்பவற்றை உள்ளடக்கி இச்சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு வார கால விஜயத்தை மேற்கொண்டு, கடந்த 10ஆம் திகதியன்று இலங்கை வந்த, ஐக்கிய நாடுகளின் உண்மை, நீதி, நட்டஈடு மற்றும் மீண்டும் வருவதற்கான உத்தரவாதங்களுக்கான விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரீஃப், கிழக்கு மாகாண சிவில் அமைப்புகளை சந்தித்தார்.

Photo Gallery

Leave a Reply


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You may enter either the first Tamil word or the second English word. But Do not enter both.
Anti-Spam Image