Monday, December 17, 2018 04:17:33 AM

இலங்கைக்கு கடன் அல்லாத நிதியுதவிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜப்பானியப் பிரதமர் தெரிவிப்பு!

Photo Gallery1 Photo By வன்னியன் - Thu Mar 15, 2:05 am

  • Read full article | 
  • Comments Off on இலங்கைக்கு கடன் அல்லாத நிதியுதவிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜப்பானியப் பிரதமர் தெரிவிப்பு!
  • 54 views

இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு உதவி வழங்கும்போது முடிந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும், கடன் அல்லாத நிதியுதவிகளை வழங்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாக ஜப்பானியப் பிரதமர் ஷிங்சோ அபே தெரிவித்துள்ளார்.

ஜப்பானுக்கு அரச முறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஜப்பானியப் பிரதமர் ஷிங்சோ அபேவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்றது. இதன்போதே, ஜப்பானிய பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அத்துடன், ஜப்பான் இலங்கையின் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்திக்கு பெற்றுத்தரும் ஒத்துழைப்பு தொடர்ச்சியாக எதிர்காலத்திலும் வழங்கப்படும் என ஜப்பானியப் பிரதமர் உறுதியளித்தார். இதன்போது துறைமுக அபிவிருத்திக்கு முன்னுரிமையளிப்பதுடன், ஏற்கனவே கொழும்பு மற்றும் திருகோணமலை துறைமுகங்களின் அபிவிருத்திக்காக ஜப்பானிய அரசாங்கத்தினால் வழங்கப்படும் ஒத்துழைப்பு தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இலங்கையின் மின்சக்தி உற்பத்திக்கு தேவையான உதவிகளை வழங்க தயாராகவுள்ளதாக தெரிவித்த ஜப்பானியப் பிரதமர், அதிவேக வீதிக்கட்டமைப்புக்களின் நிர்மாணத்திற்கும் உதவி வழங்குவதாக இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Photo Gallery

  • Read full article | 
  • Comments Off on இலங்கைக்கு கடன் அல்லாத நிதியுதவிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜப்பானியப் பிரதமர் தெரிவிப்பு!
  • 54 views

Leave a Reply

Comments are closed on this post.

Skip to toolbar