Saturday, February 24, 2018 01:15:00 AM

சுமந்திரன் தமிழ்- முஸ்லிம் மக்களின் மனங்களை நோகடித்து விட்டார்: மனோ

Photo Gallery1 Photo By வன்னியன் - Sun Oct 08, 9:25 am

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும்,

ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்னவும் தமிழ்- முஸ்லிம் மக்களின் மனங்களை நோகடித்துவிட்டனர் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மாகாண சபை தேர்தல் சட்டமூலம் திருத்தம் செய்யப்பட்ட போது சிறுபான்மை கட்சிகள் முன்வைத்த திருத்த யோசனைகளையும், அதை கொண்டுவர தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முன்னெடுத்த நடவடிக்கைகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் கண்டிப்பதன் மூலம் எம்.ஏ.சுமந்திரன், ஜயம்பதி விக்ரமரத்ன ஆகிய இருவரும் இந்த நாட்டில் சிதறி வாழும் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்களின் மனங்களை நோகடித்துள்ளார்கள் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொழும்பில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஜனநாயக இளைஞர் இணையத்தின் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே மனோ கணேசன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.