Thursday, February 22, 2018 01:06:52 PM

பிளவுபடாத நாட்டில் அனைத்து மக்களின் உரிமைகளையும் அரசியலமைப்பினூடு உறுதிப்படுத்துவோம்: மைத்திரி

Photo Gallery1 Photo By வன்னியன் - Wed Oct 04, 8:22 am

பிளவுபடாத, ஒருமித்த நாட்டிற்குள் அனைத்து மக்களினதும் உரிமைகளை உறுதிப்படுத்தும் அரசியலமைப்பின் ஊடாக பாராளுமன்றத்தை மேலும் பலப்படுத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தை பலப்படுத்திக் கொள்ளும் இந்த முயற்சிக்கு, இந்த சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல அரசியல் கட்சிகளினதும் ஆதரவு கிடைக்கும் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் பாராளுமன்ற ஜனநாயகம் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விசேட பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “பாராளுமன்றத்தின் 70 வருட பூர்த்தியானது வரலாற்றில் முக்கிய தடம் பதிக்கிறது. பிரித்தானிய ஆட்சியில் இருந்து சுதந்திரம்பெற்ற பின்னர் சோல்பரி ஆணைக்குழுவின் பரிந்துரைப்படி 1947ஆம் ஆண்டு எமது பாராளுமன்ற முறை உருவாக்கப்பட்டது. சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் உறுதிப்படுத்துவதற்கு ஆட்சிக்கு வந்த சகல அரசாங்கங்களும் நடவடிக்கை எடுத்தன. 1948 இல் சுதந்திரம் கிடைத்தது முதல் பாராளுமன்ற முறை உருவானது….

Photo Gallery

Leave a Reply

Comments are closed on this post.