Tuesday, October 17, 2017 03:43:31 AM

இனப்பிரச்சினைக்கு 70 வருடங்களாக தீர்வு காண முடியவில்லை: ரணில்

Photo Gallery1 Photo By வன்னியன் - Wed Oct 04, 8:26 am

நாட்டில் கடந்த 70 வருட காலத்தில் பொருளாதார சுபீட்சத்தையும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வையும் அடைய முடியாமல் போனதே எமது பாராளுமன்ற முறைமையிலும் ஜனநாயகத்திலும் உள்ள குறைபாடாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் சுபீட்சத்தையும் சௌபாக்கியத்தையும் ஏற்படுத்திக் கொள்வதற்கு முதலில் பிரதான தேசிய பிரச்சினையான இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை காண வேண்டும். அதற்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கையில் பாராளுமன்ற ஜனநாயகம் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விசேட பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “அரசியல் தீர்வையும் ஐக்கியத்தையும் நாம் இன்னும் இந்த நாட்டில் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. 70 வருடங்கள் ஜனநாயக உரிமைகளை பாதுகாத்து சாதனை நிலைநாட்டியுள்ளோம்.

Photo Gallery

Leave a Reply


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You may enter either the first Tamil word or the second English word. But Do not enter both.
Anti-Spam Image